பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 473 வாசனையை, எழுப்பி வீச கையில் வளையல்கள் ஒலிக்க, கண்ணானது செவ்விய கயல்மீன் போலவும், அம்புகள் போலவும் (விளங்க), இசை கொஞ்சும் குயிலென் விளங்கிப் பொன்காசுகளைப் பறிக்கின்றவர்கள் . தந்திரச் செயல்களுடன் சென்று பொன்மாலையும் பொன் ஹாரமும் (கழுத்தில்) அசைய, சிவந்த வெற்றிலை உண்ட வாயுடன் பேசியிருந்து (அத்தான் என்னும்) உறவு முறை கொண்டு கொஞ்சி (தனக்குக் கொடுக்கவேண்டிய) தொகை இன்னதென்று நிச்சயித்துப் பேசிப், பின்பு பஞ்சு ம்ெத்தையின்மேல், கர்ம் மயக்கப் பேச்சைப் பேசும் (மூளியர் ), (அச்சம்) பயமும், (சங்துை) ஐயுறவு - சந்தேகமும் இல்லாத மூளியர் - (உறுப்புக் குறையினர்). அறிவிலிகளிடத்தே (அன்பு) வைக்கும் குணச்செயலை ஒழித்தருளுக. யமனுடைய அரிய உயிர் அழிந்து போகவும், பொலிவு நிறைந்திருந்த வலிய திரிபுரங்கள் எரிபாய்ந்து அழியவும், முன்பு மன்மதனுடைய உடலம் வெந்து விழவும் (கண்டு) தம்து திறத்தைக் காட்டி, (அழல்மேவி) தக்கன் செய்த யாகத்தினிடத்திற் சென்று (அல்லது - மன்ம்தனுடைய உடல் வேகும்படி கண் தழல்மேவி - நெற்றிக்கன் நெருப்பை மேவுவித்து-செலுத்தி). தேவர்களுடன் வன்மை வாய்ந்த தக்கனும், சந்திர சூரியர்களும் பங்கப்பட்டு விழச்செய்து போய் அம்பலத்தின் மீதே ஆடு அத்தன் - கூத்தர்டின பெருமான் - சிவனுக்குக் குருநாதனே! யானையுடன், (அரி) குதிரை - அல்லது சிங்கம் தேர்க் கூட்டங்களின் மிகுதி - எழுச்சியுடன், ஏழ்கடலும் சூரபத்மனும் ஆழிபட வேலாயுதத்தைச் செலுத்தின வெற்றி வாய்ந்த திண்ணிய புயங்களைக் கொண்ட வேளே! செவ்விய குறமாது ஆகிய வள்ளி மின்னாளை (மின்னல் போல ஒளிவீசும் அழகியைப்) பார்த்து இனிமையாய் உறவு பூண்டு விளையாடி, இசை நிரம்பிய செந்தமிழ் விளங்கும் பெருமைவாய்ந்த புலியூரை விரும்பும் பெருமாளே! (மூளியர்பால் வைக்கும் செயல்திராய்)