பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 461 ஞானபூமியாகிய பேர்பெற்ற புலியூரில் - சிதம்பரத்தில் வாழ்கின்ற தெய்வயானையொடும் - மான் (வள்ளி) யொடும் (அல்லது - தெய்வயானை ஆகிய மான் போன்றவளுடன்) நாலு கோபுர வாயில்களிலும் வீற்றிருக்கின்ற பெருமாளே! (சிவபாதம் அருள்வாயே) 628. வாதம் (வாயுமிகுதலால் ஆயபிணி), பித்தம், சூலை நோய் (வயிற்று உளைவு), (விப்புருதி) - புண்கட்டி வளர்கின்றதும், கல் போன்றதுமான ஒருவகைப் புண்கட்டி (சிலந்திநோய்) கிரந்திப்புண் - கோழை, குத்திருமல், கண்டமாலை, புரை வைத்த புற்றுப்புண், (உடல்) (மனம்) தடுமாற்றம், (அல்லது ஊசி - பதனழிந்து - அழுகிப்போதல்) பலவித சன்னிநோய் (அல்லது பல் வேதனை காரணமாய் வந்த ஜன்னி), மாலைக்கண் அழுக்கு அடைவதால் வந்த குருடு (கண்ணிற் பூ விழுதல்), காது அடைப்பினால் வந்த செவிட்டுத் தன்மை, ஊமை, கெட்ட வலி நோய்கள், மூலநோய், இத்தகைய நோய்கள் முதிர்கின்ற மரம் அனைய இந்த உடல், முறைமையாகப் பொருந்திய தொண்ணுாற்றாறு தத்துவங்கள் இடம் பெறுகின்ற உடல், (வேதவித்து) கடவுள் (பரிகோலம்) பரிக்கின்ற பாதுகாக்கின்ற திருக்கோலத்தைப் பூண்டு விளையாட்டாக ஆட்டுவிக்கின்ற கடலிடைத் தோணி (போல அலைப்புறும் உடல்). சூழ்கின்ற பலவிதமான வேஷங்களைப் பூண்டு, பொருளாசை கொண்டு திரிகின்ற (விஷம்போன்ற) அழிசெயலாலே