பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 431 பெருமையும் ஒளியும் கொண்ட கொங்கை மலைகளை உடைய அழகு வாய்ந்த நாயகி (தேவசேனையும்), (சம்பை) மின்னல் போன்ற இடையையும் பொன் உருக்கி வார்த்தது போலுள்ள உருவத்தையும் கொண்ட குறப்பெண் (வள்ளி)யும் வணங்கின தம்பிரானே! (அல்லது. சுந்தரம் வாய்ந்த நாயகியான குறப்பெண் "வள்ளி வணங்கின தம்பிரானே!). அல்லது குறிப்பெண்ணை வள்ளியை வணங்கின தம்பிரானே!) (நாயெனழிந்து விழுந்துடல் மங்குவேனோ) 617. தந்தை, தாய், வீடு, வைத்துள்ள பொன், வெள்ளி, (அத்தை) தந்தையுடன் பிறந்தவள், பொருந்தியுள்ள (செல்வர்) பிள்ளைகள் . இவர்களுடன் கூடினவனாய் - கூடும்படி (வரும்படி) கற்கப்பட்ட கல்வி, உறவினர் என்றெல்லாம் உள்ள துன்பங்கள் நீங்கி உன்னைக் கூடிய வகையில் இயன்ற வகையிற்பாடி முத்தன் முத்தி முதல்வன்) நீ எனவும், திருவலம் என்னும் தலத்தில் உள்ள அத்தன் (பெருமான்) நீ எனவும், வள்ளியை முத்தமிட்டவன் (வள்ளி காதலன்) நீ எனவும், என்னுடைய உள்ளத்தில் நான் உணர்ந்து மகிழாமல் மயான (வெண்மை) அறியாமை நிறைந்த (பட்டன்) புலவனும், எண்மை) எளிமை. பரிதாப நிலை கொண்ட் மூடனும் ஆகிய நான் இங்ங்ணம் (நைவது) வருந்தி இரங்கும் நிலை(ஒழியர்தோ) நீங்காதோ! தித்தி - என்னும் தாளச்சதி நிலைபெற்று விளங்கும் தில்ல்ை நடராஜர் (கூத்தன்) நெற்றிக் கண்ணினின்றும் (உதித்து) தோன்றி நிலைபெற்றுள்ள பிள்ளை முருகனே! (சகல சித்திகளுக்கும் இடமாய் விளங்கும் செம்மை வாய்ந்த (அல்லது சிவந்த) வேலாயுதம் பொருந்திய கையனே! (சித்ரவண்ணவல்லி) அழகிய திருவுருவம் வாய்ந்த (வல்லி) வள்ளி பூ இட்டுப் பணியும் - (செம்மலே)!

  • வள்ளி வணங்கிய - வள்ளியை வணங்கின - என இருவகையும் பொருள்படும். வள்ளிபதம் பணியும். தயாபரனே' என்புழிப் போல - கந்தரநுபூதி - 6