பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • எட்டி ரண்டுதிசை யோட செங்குருதி

t யெட்டி ரண்டுமுரு வாகி வஞ்சகர்மெ லெட்டி ரண்டுதிசை யோர்கள் பொன்றஅயில் விடுவோனே: செட்டி யென்று + சிவ காமி தன்பதியில் கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட சித்த முங்xகுளிர நாதி வண்பொருளை நவில்வோனே.

  • எட்டு இரண்டு திசை - அஷ்ட திக்குக்களும் கீழும்மேலும். 1 () எட்டும் இரண்டும் உருவாகி - பத்து - எனக்கொண்டு உருவத் திருமேனியுடன் பத்துநாளிற் சூரசம்மாரத்தை முடித்தனர் எனப் பொருள் கொள்ளலாம்.

"ஐந்திருவைகலின் அவுணர்தந் தொகையும் அல்லல் ஆற்றிய சூரனும் முடிந்திட அடுதும் . ஈரிரண்டிருமூன்றாகும் இரும்பகலிடையே எங்கோன் ஆரிருஞ்சமர மூட்டி அவுணர்தம் அணிகந் தன்னைச் சூரொடு முடித்து. சிறப்பு நல்கும்" - கந்தபுராணம் 3 10-11; 11-32. (i) இனி எட்டிரண்டும் உருவாகி என்பதற்குப் பதினாறு திரு உருவங்களை உடையராகி - எனவும் பொருள் காண்பர் முருகவேளுக்குப் பதினாறு திருவுருவங்கள் தணி என்று தணிகைப் புராணம் கூறும்; அவைதாம்: (1) ஞானசத்திதரனது உருவம், (2) கந்தன் உருவம், (3) தேவசேனாபதி உருவம், (4) சுப்பிரமணிய அண்ணல் உருவம், (5) களிற்றுார்திப் பெருமான் உருவம், (6) சரவணபவன் உருவம், (7) கார்த்திகேயன் உருவம் (8) குமரன் உருவம், (9) ஆறுமுகன் உருவம், (10) தாரகாந்தகன் உருவம், (11) சேனாபதி உருவம், (12) பிரமசாத்தன் உருவம், (13) வள்ளி கல்யாண கடவுள் உருவம், (14) பாலசுப்பிரமணிய பகவன் உருவம், (15) கிரெளஞ்ச சம்மார தேவன் உருவம், (16) மயில்வாகனப் பெருமாள் உருவம் "ஈண்டு விளக்க எடுத்துரைத்த ஈரெண்ணுருவம்" - தணிகைப்புராணம் - அகத்தியனருள்பெறு படலம் - 64-79. (iii) இனி, எட்டிரண்டும் உருவாகி செங்குருதி ஒட என மாற்றி, எள் - திரண்டும் - உருவாகி - செங்குருதி ஒட - எனக்கொண்டு அசுரர்களின் எள்ளத்தக்க - இழிவுபடுத்தத்தக்க இகழ்ச்சியே திரண்டு ஓர் உருவம் எடுத்தது போல அவர்தம் ரத்த வெள்ளம் ஒட எனவும் கொள்ளலாம். (தொடர்ச்சி பக்கம் - 421 பார்க்க)