பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சுட்டு வெம்புரநி றாக விஞ்சைகொடு தத்து வங்கள்விழ சாடி யெண் குணவர் சொர்க்கம் வந்துகையு ளாக எந்தையத முறமே.வித். துக்கம் வெந்துவிழ ஞான முண்டுகுடில் வச்சி ரங்களென மேனி தங்கமுற சுத்த கம்புகுத வேத விந்தையொடு

  • எட்டி ரண்டுமறி யாத என்செவியி

லெட்டி ரண்டுமிது வாtமி லிங்கமென எட்டி ரண்டும்வெளி யாமொ ழிந்தகுரு முருகோனே. புகழ்வேனோ,

  • இது அருணகிரியார் உபதேசம் பெற்ற வரலாற்றைக் குறிக்கும். எட்டு இரண்டு - அகார உகாரங்கள்; அவற்றின் பிரபாவம் குருமுகமாக உணரற்பாலது பட்டி மண்டப மேற்றினை யேற்றினை எட்டி னோடிரண் டும்மறி யேனையே’ என்பது திருவாசகம். இங்கு எட்டினோ டிரண்டும் அறியேனையே’ எனவரும் அடிக்குப் பண்டிதமணி திரு கதிரேசம் செட்டியார் எழுதிய உரை பின் வருமாறு:- "உலகியலில் அறிவு இல்லாதவன் ஒருவனைக் குறித்து எட்டும் இரண்டும் எவ்வளவு" என்று கேட்டால் சொல்ல அறியாதவன் என்று இழித்து உரைத்தலை கேட்கின்றோம்: அதனையே அடிகள் தம்பால் ஏறிட்டு எட்டினோ டிரண்டும் அறியேனை' என்று கூறினர். இனி, எட்டினோடு என்பதற்கு அகரத்தோடு எனவும், இரண்டும் என்பதற்கு உகர மகரங்கள் எனவும் பொருள் கொண்டு, அகர உரக மகரங்களின் இயைபு ஆகிய பிரணவ மந்திரம் எனக் கோடலும் ஒன்று தமிழில் உள்ள எண்ணைக் குறிக்கும் வடிவங்களில் எட்டு அகர வடிவாகவும், இரண்டு உகர வடிவாகவும், இரண்டும்" என்புழி, இறுதி மகர ஒற்றாகவும் இருத்தல் அறிக பிரணவத்தின் இயல்பறியாதவன் என்பதற்குச் சிவமந்திரமாகிய திரு ஐந்தெழுத்தின் இயல்பு அறியாதவன் என்பது பொருள் ஆகும் என்க. இவ்வுண்மையை எட்டும் இரண்டும், இனிது அறிகின்றிலர் எட்டும் இரண்டும் அறியாத ஏழையர் எட்டும் இரண்டும் இரு மூன்று நான்கு எனப்பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே என்று விளக்கிக் கூறுவர் திருமூலர் ஈண்டு எட்டும் இரண்டும் பிரணவம் என்று அறியாத ஏழையர் இருமூன்று நான்கு என்பர் என இழித்துக் கூறியதும் அறிக" - மேல் எழுதிய திருவாசக உரை திருப்புகழ் அடியின் கருத்தை நன்கு விளக்குகின்றது அகர உகர மகரங்கள் - ஒம் என்னும் பிரணவமாம் - திருப்புகழ் - 327, பக்கம் 314, 315 கீழ்க்குறிப்பைப் பார்க்க எட்டும் இரண்டும் அறியாத என் செவியில் - மொழிந்த குருநாதனே! என்பதற்கு எட்டும் இரண்டும் பத்து என்று எண்ணிக்கை கூட அறியாத முட்டாளாகிய எனக்கும் உபதேசம் செய்து கரை ஏற்றினையே என்பது ஒரு பொருள் எட்டும்.

14