பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • அகரந்திரு i உயிர்பண்புற # அரியென்பது மாகி

உறையுஞ்சுட ரொளி xயென்கணில் வளருஞ்சிவ காமி அமுதம்பொழி பரையந்தரி உமைபங்கர ணாருக் கொருசேயே. அசுரன்சிர மிரதம்பரி சிலையுங்கெட கோடு சரமும்பல படையும் Oபொடி கடலுங்கிரி சாய அமிர்கொண்டயில் விடுசெங்கர வொரிசெங்கதிர் போலத் திகழ்வோனே:

  • மகரங்கொடி நிலவின்குடை மதனன்திரு தாதை

மருகென்றணி விருதும்பல முரசங்கலை யோத tt மறையன்றலை யுடையும்படி நடனங்கொளு மாழைக் கதிர்வே: வடிவிந்திரன் மகள்சுந்தர மணமுங்கொடு மோக சரசங்குற மகள்பங்கொடு வளர்தென்புலி யூரில் மகிழும்புகழ் திருவம்பல மருவுங்கும ரேசப் பெருமாளே. (19)

  • அகர அம் திரு . எல்லா உயிர்களோடும் மெய்களோடுங் கலந்தும் வேறாகத் தனித்தும் நிற்கும் அகர எழுத்துப்போலச் சித்தும் அசித்தும் ஆகிய பிரபஞ்சமுற்றுந் தோய்ந்தும் வேறாகத் தனித்தும் நிற்கின்ற செல்வி

t உயிர் பண்பு உற- ஆத்மகோடிகள் ரக்ஷணையைப் பொருந்த # தேவியே அரி என்பது-பாடல் 37 பக்கம் 105 கீழ்க்குறிப்பு. x இறை ஒளி கண்ணில் விளங்கும் என்பது. என் கணிலாடு தழல்வேணி எந்தையர் - திருப்புகழ் 98 பக்கம் 230 கீழ்க்குறிப்பைப் பார்க்க காளத்தியான் அவன் என் கண்ணுளானே' - அப்பர் V1-8. O பொடி - பொடிந்து துள்ளாகி, * மன்மதனுடைய கொடி, குடை முதலியன - பாடல்-555 பக்கம் 266 கீழ்க்குறிப்பு. tt பிரமனைக் குட்டினது - திருப்புகழ் - 212 பக்கம் - 2 கீழ்க்குறிப்பு. பிரணவத்தின் பொருள் தெரியாது பிரமன் விழித்த பொழுது முருகவேள் அவனைக் குட்டிச் சிறையில் இட்டார். இதன் பொருள் கருதாய், சிட்டி செய்வதித் தன்மையதோ எனாச் செவ்வேள், குட்டினான் அயன் நான்கு மா முடிகளுங் குலுங்க கந்த புராணம் 1-16-14