பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 403 6O7. மதங்கொண்ட கொடிய யானையின் இரண்டு வலிமை பொருந்திய கொம்புகள் - தந்தங்கள் என்று சொல்லும்படித் திரட்சியுற்று வளர்கின்ற கொங்கைகள் மீது அணிந்துள்ள ரத்னமாலை. (வளை செங்கையில்) செங்கையில் வளையல் இவைகளின் ஒளியைக் கண்டு (நீத்து இலங்குவரரும்) துறவியாய்ச் சிற்ந்து விளங்கும் சிரேஷ்டர்களும் திகைப்புற்று மனம் நெகிழ்வுற வருகின்ற (மான் அனைய) மாதர்களின் விதம் விதமான இன்பம் தரும் பிரியங்களையும் சிரிப்புடன் கொஞ்சிப்பேசும் குணங்களின் மேம்பாட்டையும் கண்டு, அவை மன்த்தில் அழுந்த மனங்கலங்கி, ம்ோக மயக்கம் கொள்ளாமல் விட்டொழிந்து, சிறிதேனும் சந்தேகம் கொள்ளாமல், உன்னை உணர்ந்து, வலம் வந்து, உன்னைப் புகழ்ந்து, (நான்) மிக மேம் பாட்டை - மேன்ம்ையை அடைய - உனது (விஞ்சு பொற்பதங்கள்) மேலான அழகிய திருவடிகளைத் தந்தருளுக. கங்கை நதியையும் அழகிய கரந்தை மலரையும் (அல்லது திருநீற்றுப் பச்சையையும்) திங்களையும் சடையில் அணிந்தவரும் நடனம் செய்கின்ற நம்பருமாகிய நடராஜப் பெருமான்) பொருந்தி வீற்றிருக்கும் கயிலாய- -- (நகம்) மலையைத் தனது அங்கையாற் பிடுங்க முயன்ற அசுரன் இராவணனுடைய தலையும் உடலும் உயர்ந்த நவரத்ன (மாலை) விளங்கும் திரண்ட தோள்களும். சிதைந்து போம்படி ஒரு அம்பை முன்பு செலுத்தின மேகமனையவரும், பராக்ரமம் விளங்கும் செவ்விய கண்களை உடையவருமான (அச்சுதன்) திருமாலின் மருமகனே! நாள்தோறும் (தொழவேண்டியதின்) கருத்தை தொழுவதால் வரும் பயனை - அறிந்து தேவர்கள் வந்து தாழப் பணிந்த (தில்லைத் திரு அம்பலத்தே அமர்ந்த பெருமாளே! (பொற்பதங்கள் தருவாயே)