பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 339 தனது கைத் தடியோடு குந்திக் கவியென) (கவியெனக் குந்தி) குரங்குபோலக் குந்தி நடந்து, (உந்திக்கு) வயிற்றுக்கு (அசனம்) உண வையும் மறந்து போய், உள்ளம் மிகவும் அலுத்துத் தேகத்தில் நீர் அதிகமாகச் சேர்ந்து, அறிவும், காதும் கண்ணும் மறைவு அடைந்து (தத்தம் தொழில் குறைபட்டுப்), (படுக்கையிற்) படுக்கையாய், மனையாளும், செல்வத்திலுள்ள (உறைமுறை) உறன்முறையார் உறவினரும் (சுற்றத்தாரும்) பக்கத்தில் வந்து சேரும்பொழுது கோபங்கொண்ட கரிய யமன் அணுகித் (தான்) கொண்டுவந்த பாசக்கயிற்றை எடுத்து வேகத்துடன் பிடித்து உயிரை அது பதைக்கும்படித் தனி வழியில் அடித்துக்கொண்டு செல்ல, (வந்து) (பிணத்தைப் பார்க்கத் - துக்கம் விசாரிக்கச்) சந்திப்பவர்கள் அவரவர் பங்குக்கு அழுதும் இரக்கம் காட்டியும் நிற்கப் பிணத்தை எடுங்க்ள் என்று கூறி ஒலிக்கின்ற பறைகள் மிக்கெழ, சுடுகாட்டிற் கொண்டு போய்ப் பிணத்தை இறக்கி, விறகு இட்டுக் கொளுத்தி, ஒருபிடி சாம்பற் பொடிகூட இல்லை எனும்படிச் சொல்லத்தக்க (இந்த) உடல் ஆமோ (ஆகாது) உடல் எடுக்கக் கூடாது (பிறவி வேண்டாம் என்றபடி) திந்தித் திமிதிமி திந்தித் திமிதிமி.....திமித்தி திமிதிமி திமித்தி திமிதிமி என்று (துடிகள்) உடுக்கைகள், (தவுண்டை) பேருடுக்கை, (கிடுபிடி) வட்ட வடிவான ஒருவகை வாத்தியம். (பம்பை) - பறைப்பொது (முல்லை நெய்தல் நிலங்கட்கு உரியது), (சலிகைகள்) சல்லிகை என்னும் உத்தமத் தோற்கருவிகள், கூட்டமான பறை, சங்கு திகுர்த்த திகுதிகு டுடுட்டு டுடுடுடு என்று இடிக்கு நிகராக (இடி இடிப்பதுபோல) உடுக்கை, முரசு, சிவந்த அழகிய குடமுழா (தப்பு) - ஒருவகைப் பறை, அதனோடு, மணி இவையுடன் பேரொலி எழுப்பத் தேவர்கள் மலர் (பதமிசை சிந்த) திருவடி மீது சொரிய, செழிப்புள்ள மறைமொழிகளைச் சிலர் சொல்லித்தோத்திரம் செய்ய, முநிவர்கள் மகிழ்ந்து முறையுடன் பொருந்தி அம் மறைகளை முழங்க, அசுரர்கள் போர்க்களத்திலே