பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 27 மழலைச் சொல்லுக்கு (எதிர்த்துத்) தருக்கம் பேசின. இரfணியனுடைய உடலைக் குத்தி மாமிசம் நிறைந்த செவ்விய குடலைப்பிடுங்கித் (திக்குற்ற) திசைகளை எட்டின - மிகப்பரந்த முகத்தைக் கொண்ட சிங்க (நரசிங்க) முராரி (திருமால்). வீசும் படப்பொறிகளை உடைய பாம்பு (ஆதிசேடன் மேல்) துயில் கொள்ளும் (தூங்கும்), (கிரி - மலை போன்றவன்), சக்கரத்தை ஏந்திய கையை உடைய மலை போன்றவன், பரிசுத்தமான மேகம் எனத்தக்க அழகு வாய்ந்த நிறத்த்வன், ஜகத்துக்கு (உலகுக்குத் தந்தை பரிசுத்தமான (சங்கம்) பாஞ்ச சன்னியம் என்னும் சங்கைத் திருக்கையிற்கொண்ட கூத்தன், பழைய சந்தத்தை (வடிவை)க் கொண்ட மடப்பெண், புகழப்படும் கொண்டல் ஆகிய மேகநிறத் திருமாலுக்கு வீடு ப்ேறளித்த பெருமாளே! (பக்வத்தைத் தமியெற் கென்றருள்வாயே) (26 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத்தொடர்ச்சி) O" கொண்டற்குச் சித்தியளிக்கும் பெருமாள் என்ற து. ஷண்முகக் கடவுள் திருஞானசம்பந்தராகத் திரு அவதாரஞ் செய்துற்ற காலத்திற் சிவ சாரூபம் வேண்டிக் கச்சியில் திருமேற்றளியில் தவஞ் செய்துகொண்டிருந்த விஷ்ணுமூர்த்திக்குச் (சம்பந்தர்) சிவ சாரூபம் அளித்த வரலாற்றைக் குறிக்கின்றது. "முத்தமிழ் விரகர் பாட்டலங்கலாற் பரஞ்சுடர் திருவுருப் பெற்றான்" முருகப்புத்தேள் அருள்விழிப் பாவை தன்னால் மேற்றளியில் முகுந்தனோர் இலிங்கமானான்". காஞ்சிப் புராணம் - திருமேற்றளிப் படலம் (II) அந்தருவேதிப்படலம் (35). திருப்புகழ் 999- ஆம் பாடலையும் பார்க்க.