பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 331 மிக்க நீரிழிவு, பெருவயிறு (மகோதரம்), ஈளை (கோழை),கக்கு (வாந்தி செய்தல்), களை (அயர்வு) - (சோர்வு) வருகின்ற மூத்திரத் தடை நோய் - இவைகளுடன் வெகு கோடிக் கணக்கான ஆ 鷺 நோய்களை அடைத்துள்ள (இந்த) உடலைப் பூமியின்மிசை எடுத்துத் திரிதல் - தெளிந்த அறிவு இல்லாத எனக்கும் இனி முடியாது; மங்கலம் நிறைந்த (உனது) திருப்புகழை என்னுடைய நாவாற் புகழச் சிவஞான சித்தியைத் தந்தருளுக; நீங்காத பத்தியைக் கொண்ட திருமால் மகிழ ஒப்பற்றதான் ஒளின்ய வீசும் சக்கரத்தை அவருக்கு அருளின் ஞானமயமான பவளநிறச் சடையப்பன், (புகழ்) பெருகிய சிவகாமியின் தலைவன், மிக்க சுகக் கடல்போன்ற் சித்த மூர்த்தி அருளிய முருகனே! * கடல், சூரன், கிரெளஞ்சமாலை, (அரிமுகன்) சிங்காமுகாசுரன், (ஆனை வத்திரன் - யானைமுகன்) தாரகன் - மற்றும் அசுரர்கள் (யாவரும்) இறக்கும்படிச் செலுத்தின நெருப்பு வேலனே! அமுத (மய) பீடத்தினள், குறமடவாள் ஆகிய (வள்ளியுடனும்) யானை வளர்த்த பெண் - தேவசேனையுடனும் அருணாசலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (சிவஞான சித்திதனை அருள்வாயே) 583. விடுமதவேள் வாளியின் (மதவேள் விடுவாளியின்) வலிமை அல்லது செருக்கு உள்ள மன்மதன் செலுத்துகின்ற அம்புபோல வேகம் பெற்றுள்ள ஆலகால விஷத்தை ஒக்கும் கண்க்ள் கொண்டு வா’ என்றும் பேர்’ என்றும் பேசுகின்ற சாமர்த்தியத்துடன் நூறாயிரக் கணக்கான (ஒரு நிலையில்லாத) மனத்தைக் கொண்ட மகா பாவிகளின் கஸ்தூரி அணிந்துள்ள ஆடம்பரமான கொங்கைகளில் அணைந்து சேர, ஆசைப் பிரமை பூண்ட கோணங்கியை, மண்ணு. ளோரும் விண்ணுளோரும் பழிப்புரை பேசும்