பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 - முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 581. அகப்பொருள்-முத்திபெற தனதன தந்த தத்த தனதன தந்த தத்த தனதன தந்த தத்த தனதான மொழிய நிறங்கறுத்து மகர வினங்கலக்கி முடிய வளைந்தரற்று கடலாலும். முதிர விடம்பரப்பி வடவை முகந்தழற்குள் முழுகி யெழுந்திருக்கு நிலவாலும், *மழைய ளகந்தரித்த கொடியிடை வஞ்சியுற்ற மயல்தணி யும்படிக்கு நினைவாயே. மரகத துங்க வெற்றி விகட நடங்கொள் சித்ர மயிலினில் வந்து முத்தி தரவேணும்; அழகிய மென்குறத்தி புளகித சந்தனத்தி னமுத தனம்படைத்த திருமார்பா. அமரர் புரந்தனக்கு மழகிய செந்திலுக்கு மருணை வளம்பதிக்கு மிறையோனே. t எழுபுவ னம்பிழைக்க அசுரர் சிரந்தெறிக்க

  1. எழுசயி லந்தொளைத்த சுடர்வேலா. இரவிக ளந்தரத்தர் அரியர பங்கயத்த

ரிவர்கள் பயந்தவிர்த்த பெருமாளே{73) 582. சிவஞான சித்திபெற தனதான தத்ததன தனதான தத்ததன தனதான தத்ததன தனதான Xவலிவாத பித்தமொடு களமாலை விப்புருதி வறள்ஆலை குட்டமொடு குளிர்தாகம்

  • மழையொக்கும் வடித்த கூந்தல் - கம்ப. ராமா - மாரீசன் வதை 70. மழை தவழ் வனைகுழல்'- திருப்புகழ் 650.

t ஏழு லோகம் - பாடல் 16- பக்கம் 123 # ஏழுகிரி - பாடல் 43 - பக்கம் 117 X வலி - அமரகண்டம், குமரகண்டம், பிரமகண்டம், காக்கைவலி, முயல்வலி என்று ஐவகைப்பட்ட வலிகள். வாதம் - உடலில் வாயு மிகுதலாகிய பிணிக் கூறு. வறள் - வறள் வலிப்பு - வயிற்று வலி வகை