பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 313 573. மன்மதனது மலர்ப்பாணங்கள் தைக்கும் காரணத்தாலும் பாவி இளம்பிறை வெளிவீசுவிடுகின்ற நெருப்பாலும் (என்) மானத்தைக் கெடுக்கும் வகையிற் கூவுகின்ற குயிலாலும் நானும் அதிTLD) மயக்கத்தால் இளைத்துப்போதல் (தகுதியோ) நியாயமோதான் விண்ணுலகத்தில் இருந்த பெண்ணைத் (தேவசேனையை) அணைக்கும் திருமார்பனே! தேவர்களுடைய மகுடங்கள் நறுமணம் வீசும் திருக்கழலை உடைய வீரனே! ஒளிவேலன்ே! (அடியார் பொருட்டு யமனை அவன் முதுகுவிரிய அடித்து வெருட்டி விலக்கும் பெருமாளே! o (நானும் மயலில் இளைக்கும் தரமோதான்) 574. பால் போன்றும், யதமி ழ்) நூல்போன்蠶 தேன்போன்றும் நீண்டு வருகின்ற ஆய்ந்த பாகு (காய்ச்சின) வெல்லமாய் இனிக்கும் வாய்ச்சொல்லை உடைய கொடிபோன்ற மாதர்கள் தாம் பாடி ஆடி வேட்கின்ற வலிமையினாலே (விருப்பம் ஊட்டுகின்ற சக்தியால்) பாடாய் - வேதனையுற்றவனாய் (சடு அற்று) (என்) வலிமை (என் தகுதி) தொலைந்துபோய், மத்தியிலே - ஒரு வேளையிலே - கிழிபட்டுப் போகும். "அரிவைமுரு காஎன் றழைக்குமுன்னேவந்து கரமுதவி நின்ற கருணைப் பெருந்தேவா" (போரூர்ச் சந்நிதி முறை) # கான மயிலை நடத்தும் பெருமாளே." - என்றும் பாடம் x நூல் - சாஸ்திரம் ஆகமம் எனவும் பொருள்படும். o நீள் ஆப் பாகாய் - நீண்டு வருகின்ற ஆய்ந்த பாகாய். * பாடா ஆடா வேள் தாவாலே - பாடி ஆடி வேட்கின்ற வலிமையினாலே.