பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,312 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 573. அகப்பொருள் தான தனதன தத்தம் தனதான பாண மலரது தைக்கும் படியாலே. பாவி யிளமதி கக்குங் கனலாலே, நாண மழிய வுரைக்குங் குயிலாலே. நானு மயலி லிளைக்குந் தரமோதான்; சேணி லரிவை யணைக்குந் திருமார்பா. *தேவர் மகுட மணக்குங் கழல்வீரா, t காண அருணையில் நிற்குங் கதிர்வேலா.

  1. காலன் முதுகை விரிக்கும் பெருமாளே.(65)

574. நோயற தானா தானா தானா தானா தானா தானத் தனதான பாலாய் X நூலாய் தேனாய் Oநீளாய் பாகாய் வாய்சொற் கொடியார்தாம். *பாடா வாடா வேடா வாலே பாடா யீடற் றிடைபீறுந்:

  • தேவர்கள் முருகன் கழலில் வணங்குவதால் அவர்கள் மகுடங்களில் உள்ள மலர்கள் அவர் கழலில் விழுந்து கழல் மணக்கின்றது. இமையவர் முடித்தொகையும். மணக்கும் இரு பாதச் சரோருகனும்" - (வேடிச்சி காவலன் வகுப்பு). "சுரர்மாமுடி கமழுங் கழலே - கந்தரநுபூதி 4

1 காண அரிவைமுன் நிற்கும் கதிர்வேலா - என்றும் பாடம் இந்தப் பாடத்தில் அரிவை என்பது முருகம்மையாரைக் குறிக்கும் முருகம்மையாரும் அருணகிரியாரின் காலத்துக்கு முற்பட்டவராவர். முருக நாமத்தையே ஓர் அம்மை ஒதிக்கொண்டிருக்க அவள் கணவன் ஓத வேண்டாம் அடுத்த வீட்டுக்காரன் பேர் முருகன் என்று கூறித் தடுத்தும் கேளாது முருக முருக என்று ஒதினதால் கணவன் வெகுண்டு அவள் கரத்தை வெட்டினான். அப்போதும் அவள் முருகனையே தியானித்து நிற்க முருகவேள் இரங்கி அவள் முன் தோன்றி அவள் கரத்தையும் முன்போலத் தந்தனர். "ஒருமுருகா என்றென்னுள்ளங் குளிர உவந்துடனே வருமுருகா என்று வாய்வெருவா நிற்பக் கையிங்கனே தருமுருகா என்று தான் புலம்பா நிற்பத் தையல்முன்னே திருமுருகாற்றுப் படையுடனேவருஞ் சேவகனே (தொடர்ச்சி பக்கம் 313-பார்க்க)