பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 303 குணத்திலும் ஈடுபட்டுப் படுக்கையில் அவர்களுடன் கலவி புரிந்தாலும் (விளையாடினும்) - விளங்குகின்ற அழகிய தாமரையன்ன (உனது) திருவடியில் உள்ள (நூபுரத்தின்) சிலம்பின் ஒலி ஒசையும், (நீ) கையில் ஏந்தியுள்ள கோழிக் கொடியையும், எழுதுதற்கு அரிதான ஒளி சிறந்த அழகும், மிகுந்த அளவுக்கு என் நினைவில் வருவதைத் (நான்) தடை செய்யேன் (அதாவது சிறிதேனும் மறப்பதில்லை; நன்கு நினைப்பேன். திமிதோதிமி திமிதோதி.மி.டாங்குட டீந்தகம் என்று ஒலிக்கின்ற பேரி (முரசு) திசைகள் எல்லாம் மூடும்படியும், கடல் ஏழும் பொடியாகும்படியும் பேரொலியுடன் வந்த கொடிய யானைகளும், தேர்களும், குதிரைகளும், அசுரர்களும் போர்க்களத்தில் இறந்துபட, (அதனால்) பெரிய ஆதிசேடனது தலை (பூபாரத்தினின்றும்) மீட்சிபெற, மலைகளின் பொடி ஆகாயத்தை அளாவிச் செலுத்தின வளமும் ஒளியும் வாய்ந்த வேலாயுதனே! மணம் வீசும் அழகிய கொன்றையைச் சூடிய சடையார், அடியேனுடைய துயர்திர (வெண்ணிறத்ததாய் நெருப்பால் தோன்றிய பெருமைவாய்ந்த பொடியாம்) திருநீற்றை அருளி உதவினவர், வலிமை பொருந்திய மான், துடி இவைகளைத் தாங்கிய வண்மை (ஈகை, வளப்பம்) வாய்ந்த திருக்கரத்தவர் பக்கத்தில் இருந்தருளும் உமையாள், எம்மைப் பெற்றவள், பெற்றருளிய அமைதி வாய்ந்த குருவே! கடையவனாகிய (கி. ழோனாகிய) என்னுடைய இரு வினைகளும், நோயும், மும்மலங்களும் அழிந்துபோம்படி ஸ்பரிசதிகூைடி செய்த ஒள்ளிய சுகமோகினி வள்ளிநாயகிக்குக் கணவனாகச் சொல்லப்படுகின்ற விளங்கும் கலை நூல்கள் வல்ல (சகல கலா வல்லவனாம்) முருகா! நெருப்புருவாய் ஓங்கிநின்ற மலையாம் அண்ணாமலையில் வளப்பம் பொருந்திய பெருமாளே! (வடிவோங்கிய பாங்கையும் தகையேன்)