பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 285 கவர் பூ வாழைப்பூவின் அல்லது வசீகரிக்கும்பூவின்) நிறத்தினளாம் குறமாது வள்ளியின் - மீது மால் (ஆசை கொள்வது) கடனாகும் என்றே - நமக்குக் கடமையாகும் என்றே அவளை அணைந்த மார்பனே! கடைப்பட்டவனாகிய என்னுடைய மிடி (வறுமை) துாள்பட்டு ஒழியவும், நோய் தொலையவும் (அருள் கூர்ந்து) அக்கினிப் பெரும்லையாம் அண்ணாமலையிற் பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே! (வேலுடன் மா அருள்வாயே) 564. கோபங்கொள்ளும் நாய், நரி, கழுகு இவைகளுடன் பருந்தின் கூட்டம், காக்கை, கருடன், பேய், புழு இவை யாவும் உன்டும் கண்டும் மகிழ்ச்சி யுறுகின்ற உடல் சேறு போன்ற மலம், ஜலம் எலும்பும் கூடியுள்ள (கலம்) பாத்திரம் துன்பத்துடன் கூடிய பிறப்புவலை, இறப்புவலை - இந்த இரண்டும் முன் பின்னாகத் தொடர்ந்து நெருங்கிவரும் உடல், அனேக விதமான வடிவங்களை இவ்வுல்கில் அடைந்து கடலின் சிறுமணலை அளவிடினும் அங்கு அந்த அளவின் அதிகமாக மேற்பட்டு இங்கு அழிபடுதலைப் பொருந்தும்; அத்தகைய அழிதலை உடைய (நாயேன்) அடியேன். (284-ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) மிடி - வறுமை அருணகிரியார் வறுமையிற் பட்டது. நோயிற் வறுமையாகிய தீயின்மேற் கிடந்து நெளியுநீள் புழுவாயினேற் கிரங்கி அருள்வாயே" - திருப்புகழ் 753. "மிடியால் மயக்கம் உறுவேனோ" - திருப்புகழ் 214 "மகாபிணி மேலிட முடக்கி வெட்கு மதாமத வீணனை" திருப்புகழ் 850. "பிணி அடுத்து...உடல் மங்குவேனை' - திருப்புகழ் 413. # கனல் மால்வரை - திருவண்ணாமலை. X முடுவல் நாய்.