பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 273 தேவர்கள் (மகிழ்வுற்று) உலவவும், அசுரர்கள் இறந்து பொடியாகவும், துயவும் அறிவு கலங்கும்படி, உடல்-கோபித்த - வேலாயுதத்தைச் செலுத்தின மகா உக்ர (மூர்த்தியே): (க்ரம) நீதிமானே! வற்றிப்போய் ஏழுகடலும் முறைசெய்து ஒலி எழுப்பக் கோபித்தவனே! துடி (உடுக்கை), முழவு (முரசு) இவைகளை உடைய வேடர்களின் (சேவல்) காவல்கொண்ட காட்டில் (துணை மலரின்) இரண்டு (திருவடி) மலர்களால் நடந்து நெருங்கி தினைப்புனங் காவல்காத்த (அன்னை) தாய் (வள்ளி), சுருண்ட கூந்தலைக்கொண்ட குறமகள் வள்ளி - என்னும் தேவியின் (வேளைகாத்து) - தக்க சமயத்துக்காகக் காத்திருந்து (அந்த அம்மையை) அணைந்த பெருமாளே! (அடிமைதனை உனது பார்வைக் காத்திட நினையாதோ) 558. குழந்தையாய் இருந்து, பின்பு, மாயை, காம மயக்கம் இவை பூண்ட குமரப் பருவத்தனாய், வீடு, மனைவி இவர்களொடு கூடிய நற்குலத்தவனாய், நாட்டிலும் காட்டிலும் உழன்று தடுமாறுபவனாய் - பின்னர் . உடல் வளைந்து கூன் பெரிதாய் ஆன கிழவனுமாய், உயிர் (உடலைவிட்டு) நீங்க, (உடல்) விறகுடன் சாம்பற் பொடி ஆவதையும் அறிந்து தாவி பழமையாயுள்ள ஆறு ஆதாரங்களின் மேல் நிலையில் (நிகழ்) காணக்கூடிய (அடையக்கூடிய) (கழியுடல்). உடம்பு கழிப்ட்ட (நீங்கின) நிலையை அடைந்து, நிராதர (சார்பு வேண்டாததும்) பரிவிலி - துன்பமில்லாததுமான ஆகாயத்தில் - நாலை நாடோறும் மடைமாறி - நாள்தோறும் (நாலை மடைமாறி) . (கழிந்து போகும்) நாலங்குலப் பிரமான வாயுவைக் கழியாது திருப்பிப் பல பல விதமான யோக சாதகங்கள் (யோகப் பயிற்சிகள்) செய்த உடலை வளர்த்து, அழிவில்லாததும், அறிவு மயமானதுமான இறைவனுடைய அழியாத முத்திவீட்டை நாடிச்சென்று இனியேனும் சேருவனோ!