பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 548. அகப்பொருள் தனதனன தனந்த தாணன தந்ததான கடல்பரவு தரங்க மீதெழு திங்களாலே. கருதிமிக மடந்தை மார்சொல்வ தந்தியாலே, வடவனலை முனிந்து வீசிய *தென்றலாலே. வயலருணையில் வஞ்சி போதந லங்கலாமோ, f இடமுமையை மணந்த நாதரி றைஞ்சும்வீரா. # எழுகிரிகள் பிளந்து வீழன றிந்தவேலா! அடலசுரர் கலங்கி யோடமு னிந்தகோவே. அரிபிரம புரந்த ராதியர் தம்பிரானே. (40) 549. விலைமாதர் மயக்கு அற தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனனத் தனதனணத் தனதனனத் தனதான கமலமுகப் பிறைநுதல்பொற் சிலையெனவச் சிரகணைநற் கயலெண்பொற் சுழலும்விழிக் குழல்கார்போல் கதிர்தரளொப் பியதசனக் கமுகுகளப் புயகழைபொற் கரகமலத் துகிர்விரலிற் ளிசேருங், * திங்கள், மகளிர்பேச்சு, தென்றல் - இவை காமத்தை வளர்ப்பன - பாடல் 218 பக்கம் 53) 1 தேவி இடப்பாகம் பெற்றது - பாட்டு 301 பக்கம் 246 பார்க்க அருணையில் உமைதவஞ்செய்து சிவபிரானது இடதுபாகத்தைப் பெற்றதாக அருணாசல புராணம் கூறும்: அங்கம் யாவுநம் பொருட்டுவிட் டிமயவெற் படைந்தாய் இங்கு நாமுனக் கொருபுறம் அளிப்பதே இயற்கை மங்கை யேநம திடப்புறத் துறையென மகிழ்வுற் றங்கையாலணைத் தருளினன் உருகியொன் றானார். அடுத்த செஞ்சடை ஒருபுறம் ஒருபுறம் அளகம், தொடுத்த கொன்றையோர் புறம் ஒருபுறம் நறுந் தொடையல்: வடித்த சூலமோர் புறம், ஒரு புறம் மலர்க்குவளை, திடத்தி லார்கழல் ஒருபுறம் ஒருபுறம் சிலம்பு பச்சை வண்ணமற்றொருபுறம்: ஒருபுறம் பவளம்: கச்சு லாமுலை ஒருபுறம், ஒருபுறம் கவின்மார்; (தொடர்ச்சி பக்கம் 549. பார்க்க)