பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை) திருப்புகழ் உரை 229 538. துன்பத்தின்மேல் துன்பம் தருவதான கொடிய (மன்மத) பாணங்களின்மேலே வந்து முடிவைத் (அழிதலைத்) தருவதான தென்றல்காற்று வீசிவருகின்ற அந்தக் காரணத்தாலும். தகுதியைக் கொண்டதும் காட்டகத்து முயல்போலுங் களங்கத்தினைக் கொண்டதுமான வடிவத்தில் நின்றும் நெருப்பினைவிசும் அழகிய சந்திரனுடைய ஒளியாலும். தொடர்ந்து - மேல் மேல்வந்து - கொடிய வேதனையை (நான்) அடையும்படி, கரையின்மேலே அலைகள் பட்டழிய அவைகளை ஒப்பற்ற விதத்தில் வீசுகின்ற கடலாலும். துணை எவருமின்றி, அலங்கரித்த அழகிய மலர்ப்படுக்கையில், தனியனாகிய எனது உயிர் வாடுதல் தகுமோ! என் துக்கம் ஒழியாதோ! வடக்கே உள்ள பொன் செறிவுகொண்ட மேருமலை போல் விரைந்துசென்று சண்டை செய்த சூரன் இறந்துபோம் வகையிற் சுடும்படி அவன்மீது செலுத்தின கூரிய வேலனே! வேடர் குலத்தவளாம் ஒப்பற்ற குறக்குலத்து, மெய்ம்மை திகழும் இலக்குமியின் சிறந்தமகள் (வள்ளி) மகிழும்படி அவளிருந்த தினைப்புனத்துக்கு விரும்பிச் சென்ற மயில் வீரனே! நெருக்கமாய் வளர்ந்துள்ள தாழை மடலின் தழைகள் சேர்ந்துள்ள வயல்களை உடைய திரு அண்ணாமலைத் திருவீதியில் வீற்றிருப்பவனே! அவனிக்கு - திருமாதுக்கு - சிவனுக்கு - இமையாவிழி அமரர்க்கு - அரசாகிய பெருமாளே! மண்ணுலகத்தார்க்கும் திருமாது - உமைக்கும், சிவனுக்கும் இமையாத விழிகளை உடைய விண்ணுலகத்தார்க்கும் - அரசனாகிய பெருமாளே! (துயர் தொலையாதோ)