பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 538. அகப்பொருள் தனணத் தனதானன தனணத் தனதானன தனனத் தனதானன தனதான இடருக் கிடராகிய கொடுமைக் கணைமேல்வரு மிறுதிச் சிறுகால்வரு மதனாலே. இயலைத் தருக்ானக முயலைத் தருமேனியி லெரியைத் தருமாமதி நிலவாலே. தொடரக் கொடுவாதையி லடையக் கரைமேலலை தொலையத் தனிவீசிய கடலாலே துண்ையற் ற்ணியூமல ரணையிற் றனியேனுயிர் துவளத் தகுமோ துயர் தொலையாதோ: வடபொற் குலமேருவின் முடுகிப் பொருஆரனை மடியச் சுடஏவிய வடிவேலா. மறவக் குலமாமொரு குறமெய்த் திருமாமகள் மகிழப் புனமேவிய மயில்வீரா, அடரப் படர்கேதகை மடலிற் றழைசேர்வய லருணைத் திருவீதியி லுறைவோனே. t அவ்னித் திருமர் தொடு சிவனுக் கிமையாவிழி அமரர்க் கரசாகிய பெருமாளே (30)

  • முயலைத் தருமேனி - முயற்களங்கத்தைக் காட்டும் வடிவம்

t அவனித்திரு . மண்ணுலகோருக்குத் திருவே' எனலுமாம். "திருவே என் செல்வமே" - அப்பர் தேவாரம் (6-47-1). திருமாது பார்வதி. திருமாது வெகு ரூபி.சிவை திருப்புகழ் 644 திருமாதோடுறை கோயில் திருமாதைப் பாகம் வைத்து சம்பந்தர் 1-3-3; 2-50-4; இமையாவிழி அமரர் - இமையாது விழித்த அமரர்" -சிதம்பர மும்மணிக்கோவை. 20. திருமாதொடு சிவனுக்கு இமையா விழியே எனக் கொண்டு பார்வதியும் சிவனும் பார்த்த கன் பார்த்தபடியே (கன் ங்காமல் பார்க்கின்ற பொருளே - எனவும் பொருள் தொனிக்கும் சிவபிரானை இமையா முக்கண்...செல்வன்' எனத் திருமுருகாற்றுப்படை கூறும.