பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 210 வேடர்மகளின் அமுதமும் புளகிதமும் கொண்ட, சந்தனக்கலவை பூசப்பட்ட, வளர்ந்துள்ள, மை வாய்ந்த, கொங்கையை அணைந்த மார்பனே! வலிமையும், அலங்காரமும், அழகும், பச்சைநிறமும் கொண்ட லில் அழகுடன் திரு அண்ணாமலையில் வி ನಿಣೀ| ன! அரிய வேதங்களின் தொகுதி (கூட்டம்) முறை முறையாக ஒதுகின்ற திருமால், அரன், பிர்மன் ஆதிய இம் மூவர்க்கும் தம்பிரானே! (தனிமலர் அணையில் நலங்கலாமோ) 533. (பெண்) யானையின் நடையைக் கொண்ட மாதர்களுக்கு வசப்பட்டு உருகி, வருத்தம் தருகின்ற பாழான வினைப்பயனால் (நற்) கதியைப் பெறுதற்கு நினையாமலும், (உன்னைத்) துதிப்பதை அறியாமலும், அழிவைத்த்ரும் சுகத்தில் (சிற்றின்ப்த்தில்) கிேன்றி அறிவாம். சதைகொண்டதும், பழிப்பான பேச்சு_இடமானதுமான உடலுடன் (அல்லது. சதைக்டியதான, (அழிந்துபோவதான), வச்ை பழிக்கத்தக்க்தான உடலுடன்). இப்பூமியில் மிகவும் அலைவேனோ (அல்லது அழிவ்ேனோ} நூற்றிதழ்த் தாமர்ை யன்னதும், பிறவிக்கடலைத் தாண்டப் பெரிய தெப்பம் போன்றதுமான உன்னுடைய திருவடி நிரம்பத் தருகின்ற நிழலிற் சேர (அல்லது உன்னுடைய) திருவடியாம் மர நிழ்லிற்சேர்) அருள் தருவாயே! பிரமனைப் பெரிய {ಳಿ" புக வைத்தவனே! அழகிய பெரிய கரிய திருமாலுக்கு மருக்னே! திரிபுரத்தை எரித்தவருடைய இடது பாகத்தில் மகிழ்ந்திருக்கும் பார்வதி அருளிய சிறப்புற்ற்குழ்ந்தையே! அசுரர்கள் இருந்த பெரிய கிரவுஞ்சமலை இரண்டு பிளவு ஆகும்படி (நின்ற) மாட்சிமை அல்லது நீதிவாய்ந்த் வேலாயுதத்தை வேகத்துடன் செலுத்தினவனே! பூமியில் புகழ் நிறைந்த தலம் எனப் பேர்பெற்ற அருணாசலத்தில் (திருவண்ணாமலையில்) பெரிய மதிலின் வட புறத்தே (வீற்றிருக்கும்) பெருமாளே! (தரணியில் மிகவே உலைவேனோ)