பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புகழ் உரை 201 524. நஞ்சு போன்ற கண்களாம் நீலோற்பல மலராலும், வாயிதழ் ஊறல் பருகுவதாலும், கூந்தற் பாரமாம் மேகத்தாலும். முத்துப்போன்ற பற்களாலும், வில்லைப்போன்ற போருக்கு உற்ற நெற்றியினாலும், (புருவத்தினாலும்), விரிவான (பலவித நடையினாலும், நல்ல கொங்கையாலும் மிகவும் மோகம் கொண்டவனாய்க், காலனுடைய முத்தலைச் சூலத்தைக் (கண்டு), அவன் கட்டும் பாசக் கயிற்றினால் துன்பத்தில் ஆழ்ந்து அந்தத் துக்கத்தில் (தாழ்வில் - மனச்சோர்வில்) உயிர் விழுதல் உற்று (உயிர் அழுங்கி), ஊழ்வினை விடாது தொடர்ந்து சாவதற்கு முன்பு (அடியேனை) ஆட்கொள்ள மாட்டாயோ! சோலைகளைக் கொண்ட காட்டகத்தே அழகிய வேடர் குலத்து மான் போன்ற வள்ளியைத் தோளில் உறவுபூண்டு அணைந்து கொண்ட செல்வமே! சோதி முருகனே நித்தனே (என்றும் அழியாதவனே): பழமையானதும், ஞானபூமியுமான திரு அண்ணாமலை விதியில் வீற்றிருக்கும் கந்தவேளே! குழந்தையே! தோகை நிறைந்த அழகிய மயிலை நடத்துபவனே உமைபங்கனாம் சிவகுமரனே! பாத தாமரையில் ஞானமலரை யிட்டு (அல்லது பாதமலர்மீது படும்படி பூவையிட்டுப்) பாடித் தொழுபவர். களுடைய தோழத் தம்பிரானே! (ஏவற் கொண்டிடாயோ)