பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை! திருப்புக ழ் உரை 197 522. முழுகி வடவா முகத்தின் (விடவா முகாக்கினியில் மூழ்கி) அங்கு பெற்ற சூட்டுடனே தோன்றும் பூரண சந்திரனுடைய ஒளிக் கிரணங்களுக்கும், நிந்தனை பேச்சுப் பேசும் மடமையுடைய மாதர்களுக்கும், இனிமை வாய்ந்த தனி - ஒப்பற்ற புல்லாங்குழலின் இசையொலிக்கும், பழையவனாம் மன்மத ராஜனுடைய (சேஷடைகளுக்கும்) நான் (உட்பட்டு) அழிந்துபோகாமல் . புனுகு சட்டத்திலும் (மணம்) விளங்கும் (நீபமதில்) கடம்பிலும், அழகிய குராமலரிலும் வரிசையாக அமைந்த (மாலைகளின்) புதுமைத் தோற்றம்கொண்ட பன்னிரு புயங்களின் மீதே - அணைந்து சேரும் வழியையே (நான்) நினைத்துள்ள (உண்மையை உலகோர்) தெரியும்படி (நீ) நீலநிறங்கொண்ட அழகிய சண்டைசெய்ய வல்ல மயிலில் ஏறி நித்தமும் வரவேணும்; எழு மகர வாவி (மகரம் எழுவாவி). மகரமீன்கள் உள்ள தடாகங்கள் சுற்றிலும் உள்ள சோலைசூழ்ந்த அருணை (திரு அண்ணாமலை) நகர்க்குள் எழுதுதற்கு அரிய கோபுரத்தில் உறைபவனே! இடைது.வள வேடுவச்சி (வேடுவச்சியின் இடை நெகிழவும்), படம் (சீலை - ஆடை) அசையவும், பருத்த இளமை வாய்ந்த (அவளது) கொங்கையை விடாத அழகிய மணிமார்பனே! செழுமை கொண்ட மணிமுடி நாகம் நெருங்கும், ஒழுகி விழும் கங்கை நீரைச் சடையில்வைத்த சிவபிரானை முதல் நாளில் ஒதுவித்த (சிவபிரானுக்கு உபதேசம் சொன்ன) குருநாதனே! பிரமன், திருமால், பின்னும் அருமைவாய்ந்த பல தேவர்கள் இருந்த சிறையினின்றும் எல்லாரையும் மீளும்படி வெளியேற்றிய பெருமாளே! (மயிலில் ஏறி நித்தம் வரவேணும்)