பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 189 நெருங்கின குலத்தினர் - உறவினர் அழ, பழைய நட்பினர்கள் அழ, பறைகள் கொட்டிவர, யமனும் பருத்த கையிலுள்ள பாசக்கயிற்றை என்மீது விட்டு எறியும் அந்தத் தருணத்தில் என்னை (யமனிடத் திருந்தும் நீக்கிக்) காப்பாற்றி என் உயிரைத் தந்தருளுக. வேல், தரும நிலைக்கோழி, இவை இரண்டும் திருக்கரத்தில் இனிது விளங்க மியில்மீது விளங்கித் திரு அண்ணாமலையில் கோபுரத்து (வாயிற் பக்கத்தில்) வீற்றிருப்பவனே! தேவர்களுக்குத் தலைவனே! சிறிய குமரி வள்ளிக்கு (அல்லது . அத்தேவர்கள் இடையே வளர்ந்த இளமை வாய்ந்த தேவசேனைக்கு) (முத்தம் இட்டுப்) பிரியம் தருபவனே! சிவபிரானை அருமையான சொற்களால் பாடும் பாவலர்க்கு (சிவனைப்பாடும் புலவர்க்கு) எளியவனே! மேகங்கள் இளைப்பாறுகின்ற (தங்கிப் படிகின்ற) அழகிய மலை (வள்ளிமலையின்) நெருங்கிய சாரலிலே (மலைப்பக்கத்தே). தினைப்புனங் காத்திருந்த வேடப் பெண்ணைக் கூடினவனே! பொடிபடப் பூதரத்தொடு (சூரனைக் காத்திருந்த 6յ (ԼՔ மலைகள்) பொடிப்டக் கடலில்ே மாமரமாய்க் கிடந்த சூரனைப் பொருது அடக்கிய பரிபூரண பராக்கிரமப் பெருமாளே! (ஆவியைத் தரவேணும்) 519. கறுவு (சினம்-கோபம்) மிகுந்து ஆவியைக் கலக்கும் அந்த காலனைப்போல விளங்கும் கன்ை என்கின்ற மீன் மகிழ்ச்சியுடன் நாட (விரும்பிப் பார்க்க). யோசனை செய்து முன்னதாகவே அளவான பொருள் இவ்வளவு என்று பேசி, உள்ளத்தே வைத்த கள்ளத் தனத்தால், பெற்ற அளவுக்கே உறவு பூண்டு -