பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா) திருப்புகழ் உரை 157 தந்திரசாலியை, மூடனை, வீண் புகழ்ச்சி கர்வப் பேச்சு-பேசும் (உதவாக்கரையை) உபயோகம் அற்றவனை, உள்ள கலை நூல்களை ஆய்ந்தறியாத முழு வெறுப்புக் கொண்டவனை (பொறுமை யற்றவனை) அறிவு போன (கபடனை) வஞ்சகனை - அல்லது அறிவு ஒடிப்போம்படி தப்பவிட்ட காவலாளனை, குற்றங்கள் நீங்காத வினை நிரம்பியவனை, சொல்லும் சொல் சோர்வு பட்டபாவியை (சொல்லும் பேச்சு தவறிய) பாவியை, இறந்து சேரும் நரகத்திடை விழுந்துள்ள மூடனை எங்குளான் இப்படிப் பட்டவன் என ஆய்ந்து கவனித்து, முன்னதாக உனது திருவருளையும் பாலித்து (என்னை) நன்கு ஆண்டருளும் காலமும் ஒன்று உண்டா? பகைவர்களுடைய திரிபுரங்கள் அழிந்து தூளாக (மேரு) மலையை ஒரு திைல் வில்லாக வளைத்த நாரணி, (கழல் சிலம்பணிந்த மலைமகள், காஞ்சிமாநகரில் விளங்கும் தேவி (காமாகூதி) இன்பம் நிறைந்த மயில் போல்வாள், சிவபிரானுடன் வாழும் அழகி, கடலை உடையாக (ஆடையாகக்) கொண்ட உலகை யின்ற தாய் உமாதேவி, திரு ஆனைக்காவில் வீற்றிருக்கும் அகிலாண்ட நாயகி அருளிய குழந்தையே! மாறுபட்ட போரில் முற்பட்டெழுந்த ராவணன்-இடி ஒலியுடன் அலறியும் - அதன்முன்பு - கவலைப்பட்டும் - வாய்விட்டு அழ (உரக்க அழ) (அவனுடைய) பல முடிகளையும் (தலைகளையும்) அரிந்து தள்ளிய (திருமாலின்)-விஸ்வரூபம் எடுத்த திருமாலின்-மருகனே. முன்பு ஒப்பற்ற குறமகள் (வள்ளியின்) நுண்ணிய நூல் போன்ற இடை மீதும் இரண்டு கொங்கையாம் மலை மீதும் தோய்ந்த ஆசையாளனே! மிகப் பழையதான வேத மொழியை ஆய்ந்துள்ள தேவர்களின் பெருமாளே! (ஆள்வதும் ஒரு நாளே)