பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா திருப்புகழ் உரை 153 506. நிறைந்த பவளம் போன்ற வாயிதழ் ஊறல் (இதழில் ஊறும் நீர்) தேன் நேரெனத் தேனை ஒக்கும் (என்று கூறியும்) வீரம். (அல்லது கொலைத் தொழில்) கொண்ட கண் ஆலகால விஷத்தை ஒக்கும் (என்று கூறியும்) நீண்டதும் சுருள் கொண்டதும்ான கூந்தல் மேகத்தை நிகர்க்கும் (என்று கூறியும்), (நெஞ்சின்மேலே)-மார்பின்மேலே நெருங்கியுள்ள அழகிய கொங்கைகள் பெரிய மேருமலைக்கு ஒப்பென்று கூறியும், இடையானது உருவம் இலாத வெளிக்கு ஒப்பென்று கூறியும், அல்குற் பிரதேசம் சிவபிரான் அணியும் மாலையாம் பாம்பை நிகர்க்கும் எனக் கூறியும், (உள்ளம்) நைந்து (சோர்வடைந்து) ஜீவன். மங்கலுற்று (இதம்பட) இன்பம் அழியவாயால் பாடி, அன்பு இல்லாமலே அழைத்துப் படுக்கையின் மேல் விழும் சையுடன் களித்துக் குதித்து ஆடை நெகிழவும் (காம டாயில்)தாகத்தில் (அமைந்து) பொருந்திஅம்மாதர்களின் (நாபி) கொப்பூழில் (தொப்புளில்). மூழ்கித் திளைத்து அனுபவித்து, களைப்பைத் தருகின்ற பெரிய மாய வாழ்க்கையைத் தருகின்ற மாதர்கள் பால் ஒப்பற்ற மகிழ்ச்சியைக் கொள்கின்ற குரங்கைப்போன்று திரிவேனோ! மனஒடுக்கம் என்று அடைவேன்! (தான் சொன்ன சொல்லை) மறந்துபோன சுக்ரீவன் என்னும் மகா நீசன் (இழிந்தோனுடைய) ப்பிடத்தின்) வாயிலில் நின்று "ஏ! லுத்தனே லோபியே பேராசை யுள்ளவனே)! நீ தெளிவு அடையாததற்கு உணர்ச்சி பெறதிருப்பதற்கு) (ஏது)காரணம் என்ன சொல், (கள்ளுண்டு) மனம் களிப்புறுதல் நியாயமா! உன் செய்கை (§))) பாதகம் ஆகும்; முன்பு வாலியை * என்று சொல்; வானரப் பேரே மாண்டுபோம் என்று சொல்" எனக் கூறி அனுப்பினார். பின்னர் அநுமாரும் தாரையும் இடை நின்று இலக்குணமருக்குச் சமாதனம் கூறிச் சுக்கிரீவனை பெருஞ் சேனையுடன் இராமரிடம் வந்து கூடி மன்னிப்புக் கேட்கும்படி (தொடர்ச்சி 154 பக்கம் பார்க்க)