பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தம்பலம்) திருப்புகழ் உரை 861 989. (அமல) ԼD/T : இல்லாததாய், (கமல உரு) (ஆறாதாரங்களுக்கு அப்பால் உள்ளதாய் 1008 இதழோடு கூடிய) - குருகமல உருவிடத்தே (பிராணவாயுவைச் செலுத்த அப்போது உண்டாகும்) சங்கம் தொ னித்த மறை - சங்க நாதம் - சங்கஒலி உண்டாகும் (மறை) ரகசியமாய், அருமையாய், மேலானதான ஞானவெளி எங்கும் பொலிவுறும் செயலை அளவிட்டறியும் (அசலம் அது கண்டு) நிலை பெற்றதான தன்மையை உணர்ந்தும், அவ் விடத்தில் எவராலும் தனது (உளவு) உண்மைத் தன்மையை அறிய முடியாததாய் அகாராதி கூடிகாராந்தம் உருக் கொண்டுள்ள ஐம்பத்தொரு அக்ஷரங்களுக்கும், சகல லோகங்களுக்கும், நதிகளுக்கும், அண்டங்களுக்கும் முதன்மை பெற்றதாய், செந்நிறச் சுத்த சோதிப் ப்ேரொளியை எல்லா இடங்களிலும் வீசிப் பொருந்தியதாய், முதலும் நடவுமாய் (கமல துரிய மதில்) துரியம் - யோகியர் தன் மயமாய் நிற்கும் உயர் நிலையாம் பிரமரந்திர கமலத்தில் சந்திரகாந்தி பரந்துள்ளதும், பொன்னொளி வீசும் தன்மை கொண்டதும், அழகிய ஸ்படிக நிறமான சுத்த வாயிலைக் கொண்ட ஆகாய வ்ெளியில் ப்ரவெளியில், சுழிமுனை நாடியின் உச்சியில் (மெய்,வாய்,கண்,மூக்கு செ என்னும்)பஞ்சேந்திரியங்களும் இன்பம் பெறக்கூடியதாய் (விளங்கும்) அமுதம்போல இனிக்கும் சிவயோக நிலையை உனது கருணையால் அறியும்படியான வழியை (நான்) அடையவும், பார்வதியின் குமரனே! குமர குருவே' (என்றென்று) என்று பலமுறை கூற முதிர்ந்த கனிந்த பத்தி நிலை வர - அதற்கு வேண்டிய பால்ய வலிமையைத் தந்து உன் திருவடியில் என்னைச் சேர்த்தருளுவாயாக

  • படிக் கதவம் - படிகக் கதவு. " இந்து ஒளிர் சோதிவின் படிகம்" பாடல் 766 அடி 2.

11 அஞ்சும் - பஞ்சேந்திரியங்களும். =l

  1. சிவயோகத்தின் நிலை - பாடல் 357-அடி 1-3 பார்க்க