பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புத்துர்) திருப்புகழ் உரை 845 திருடின கரங்களை உடைய (திருமாலாம்) இடபத்தின் முதுகின்மேல் (சமுக்கு இட்டு) சேணம் போட்டு ஏறி முழக்கத்துடன் வருபவர், செலுத்தப்படும் பூதம், பேய்க்கணம் - இவை விளங்குகின்ற படையாளி (இவைகளைப் படையாகக் கொண்டவர்) சடையில் பூளைப்பூ நிலவு, கொன்றை, வெள்ளெருக்கு இவைகளைச் சூடியுள்ளவர் - ஆகிய சிவபிரானது குமரனே! வயல்கள் பொருந்திய திருப்புத்துார் என்னும் தலத்திற் பொருந்தி வீற்றிருக்கும் பெருமாளே! (எப்போது சரியை கிரியை செய்துயிர் வாழ்வேன்) 984. வேலாயுதமும் தோற்றிப் போகும்படிக் கண்கொண்டு பார்த்து. காதில் உள்ள ஒலையைக் காட்டி, சிரித்து, போகவேண்டிய ஒரு வீட்டையும் காட்டி, அணிந்துள்ள மேலாடையை நெகிழ்வாகி) நெகிழும்படி விட்டு. (மேனி) உடலைக் காட்டி, (வளைத்து) (ஆடவர்களின்) மனத்தைக் கவர்ந்து, போருக்கு எழுந்தது போன்ற கொங்கையாம் யானையைக் காட்டியும், மறைத்தும், தோதகம்) வஞ்சகத்தின் (விறு) முழு சக்தியையும் காட்டி உபயோகப் படுத்தி, எதிர்த்துச் சண்டையிட்டு எதிரே வருபவர்களிடத்தே. காலத்து. குத் தக்கபடி - சமயத்துக்குத் தக்கவாறு (உழப்பி) பேசம் வார்த்தைகளை மழுப்பி, தாம் சொன்ன காசைக் கேட்டு அதை (முதலில்) கைப்பற்றிப் பின்பு மத்தியிலே - (காதி) (மனம் வேறுபட்டுப்) பிரிந்து (அவர்களை வெருட்டி) ஒட்டிப் (பின்னும் அவர் பொருள் தந்தால் வருத்தப்பாடுடன் வருவார்போல் - தாம் முன்பு வெருட்டி ஒட்டின செய்கைக்கு வருந்தி வந்தவர்கள் போல நடித்துத்) தமது (காதலை அன்பைக் காட்டும் மலர் விரித்த அழகிய படுக்கையில் (அனாப்பும்) ஏமாற்றுகின்ற (அசட்டுச் சூளைகள்) மூட வேசிகள் மீது காம இச்சை என்னும் நோய் வாய்ப்படும் மனத்தால் ஏற்படும் தீவினையை விலக்கேனோ! தீவினையினின்றும் நீங்கிப் பிழையேனோ!