பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புத்தும்) திருப்புகழ் உரை 843 திருப்புத்துளர் 983. (கருப்புச் சாபன்) கரும்பு வில்லையுடைய மன்மதன் போன்ற இளைஞர்கள் பிரமித்து மயங்கும்படி காம இச்சை உலவுகின்றதும், நீண்டதுமான கடைக்கண் பார்வையை உடைய இனிமை வாய்ந்த மாதர்களின் கொங்கைப் பாரங்கள். 'யானையின் தந்தம், குடம், நிறைந்த நவரத்னச் செப்பு (சிமிழ், கரகம்), (ஓடை) நீர் நிலையில் மலர்ந்துள்ள (வனச நறுமலர்) தாமரையின் நறுமணமலர், பாரத்துடன் தென்னம் பாளையும் முறியும்படி எழுந்துள்ள (நிகர்) ஒளியுள்ள இளநீர் போன்று மலையையும் மோதிச் செயிக்கவல்ல வலிமையைக் கொண்டன, (அறச் சற்றான) மிகவும் (சற்றான) அற்பமாயுள்ள த்துள்ள இடையை மெலியும்படிச் செய்வன, புதிய ரவிக்கையுடனும், (ஆரவடம்) முத்துமாலை யுடனும் நெருங்குவன" - என்றெல்லாம் நாள்தோறும் புகழும் பாடல்களை (அம் மாதர்களுக்கு) அடிமைப்பட்ட (அவரவர்) அந்த அந்தக் காதலர்கள் ஆசையுடன் எடுத்தாண்டு பேசப் பாடுகின்ற (அல்லது - அடிமையாகிய நான் (அவரவர்) அந்த அந்த மாதர்கள் அன்பு கொண்டு என்னை ஏற்கும்படிப் பேசும்) இழிவான தொழிலைச் செய்கையைப் போகவிட்டு, (நான்) எப்போ து சரியை, கிரியை மார்க்கங்களில் நின்று உழைத்து உயிர் வாழ்வேன்! அஞ்ஞானம் நிறைந்த (இந்தப்) பூமியில் யமனுடைய உடல் பதைக்கும்படிக் கால் கொண்டு (விழ உ செய்தவன்) விழும்படி அவனை உதைத்தவர். (எயில்) # வலியைத் தொலைத்தவர், தேவர்களின் உடல், அவர்களின் தலைமாலை (சிரங்களாலாய மாலை) ஆகிய எலும்பு வடத்தை மாலையை அணிந்தவர், மிகவும் நடுங்கச் செய்து) முழக்கம் செய்து, காளியானவள் அஞ்சும்படி ஒரு நொடிப்பொழுதில் எதிர்த்து நடனம் புரிந்த வயிர பயிரவர் பயிரவமூர்த்தி, வெண்ணெயைத் (தொடர்ச்சி)# நவநீத திருட்டுப் பாணி கண்ணபிரான் . "தாழியில் வெண்ணெய் தடங்கை யார விழுங்கிய பேழைவயிற் றெம்பிரான்" - பெரியாழ்வார் 1.4.9.