பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலஞ்சி திருப்புகழ் உரை 829 978. (மாலையில்வந்து) மாலைப்பொழுதில் --- அந்திப் பொழுதில்-இரவில் வந்து, (மாலை) காம இச்சையை (வழங்கு) ன்ற (மாலை) (மகிழம்பூ மாலை (அணிந்த (அனங்கன்) (அல்லது மாலை சமயம் தெரிந்துவரும்) அனங்கன் - மன்மதன் (எய்கின்ற) மலர்ப் பானங்களாலும் * வாடைக்காற்று στζιρί545), அதனுடன் கலந்துவரும் வாடை-(மலர்) வாசனைகள் மிகுந்து அந்த மணத்துடன் வரும் அந்த வாடைக் காற்றானது - (வாடை) வடவா முகாக்கினி போல வீசி எறியும் நெருப்பாலும் * (தனது) அழகெலாம்.அழிந்து, மிகவும் மெலிந்து, இந்த இளமை வாய்ந்த பெண் சோர்வு அடையா முன்பு (கூடிய கொங்கை) இவளது கொங்கையைக் கூடிட (நீ) குன்றாது நீளும் அன்பு மிக்குஎழ இன்று வந்தருளவேண்டும் காலனும் அஞ்சும்படி வேல் ஏந்திக் காட்டில் (பொய்யாமொழி வரும் காட்டில் வேடனாய்) நடந்த முருகனே! (வள்ளிமலைக் காட்டில் (தினைப்புனத்தில்) இருந்த பெண். வள்ளி நானும்படி, அவளுடன் பேசி அவள்மீது உனக்கிருந்த காதலை வெளிப்படுத்தி (அல்லது மடந்தை முன் (நீ) நாணம் ஒழிந்து வெட்கத்தை விட்டு அவளிடம் காதல் மொழிகளை உருகத்துடன் பேசி) மனம் உளைந்த குமரேசனே! சோலைகள் சூழ்ந்து நெற்பயிர் விளைந்து சூழ்ந்துள்ள இலஞ்சி என்னும் தலத்தில் மகிழ்ச்சி கொண்டவனே! ‘ஐயரே! நானோ இழிகுலத்தவரான வேடர் பாவை நீரோ முழுதுலகாளும் முதல்வர் என்னைத் தழுவ வேண்டி உம்மைத் தாழ்த்தி நீர் பேசுதல் பழிக்கு இடமாகுமே ஒழிய நல்ல தன்று "புலி பசித்தால் புல்லை உண்ணுமா"- என்றாள். 'குமரன் சிந்தையில் ஒன்றிய கருத்தினை உற்று நோக்கியே நன்றிவர் திறமென நாணிக் கூறுவாள்" "இழிகுல மாகிய எயினர் பாவை நான், முழுதுல கருள்புரி முதல்வர் நீரெனைத் தழுவுதல் உன்னியே தாழ்ச்சி செப்புதல், பழியது வேயலால் பான்மைத் தாகுமோ"

    • என் கலவியை விரும்புதல் கடன தன்றரோ புலியது பசியுறில் புல்லுந் துய்க்குமோ" . கந்தபு 6.24.89.9. முருகவேள் தமது நாணத்தை விட்டுப் பரிதபிக்கப் பேசினர்.

- பாடல் 209, 261, 1002, 1003,