பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு புருஷமங்கை திருப்புகழ் உரை 819 ஒரு சேரவே - பொருந்தி விளங்கும் பரிசுத்தமான தடாகங்கள் பொருந்தியுள்ள பூ புருஷமங்கையில் வீற்றிருக்கும் பெருமாளே! (நின்றன் அருள் தாராய்) 974. (வேனின் மதன்) - வேனிலான் - மன்மதன் தனது மலர்ப் பாணங்கள் ஐந்தையும் செலுத்த மனம் வேதனை அடைந்து விதிகள் தோறும் நின்றுள்ள மாதர்களிடத்தே இதுவே சமயம் என்று வந்து அவர்கள் காலில் விழுந்து, ஆசைதிர நட்பான பல பேச்சுக்களைப் பேசித் தேனைவிட அதிக நறுமணம் - நறுஞ்சுவை கொண்ட வாயிதழ் அமுத ஊறலைப் பருகி, (அம் மாதர்களின்) தண்ணிய கொங்கைகளில் முழுகித் தேடின பொருள் எல்லாம் அழிய, முயற்சி செய்து, அடையவேண்டிய கதியை (மோகூ, வீட்டை) அடைதலில்லாமல் (வீணாக) அலைந்து திரிவேனோ! பசுக் கூட்டங்களைத் (துரந்து) ஒட்டிச் செலுத்தியும், பெரிய பூமியைத் (திருவடி கொண்டு) அளந்தும், ஒரு ஆலிலையில் (ஊழிリ அன்று துயில் கொண்டவனுமான மாயன், இடையர் வீடுகளிர் போப்ப் பாலையும் தயிரையும் (அளைந்த) கலந்து பருகின - வேதம் (போற்றும்) முகுந்தன் ஆகிய திருமாலின் மருகனே! வானவர் புகழ்ந்த மானொடு - கானவர் பயந்த மானொடு தேவர்கள் புகழ்ந்த போற்றிய மான் - தேவசேனையுடனும், வேடர்கள் மகளாய் வளர்த்த மான் வள்ளியுடனும், விளங்கும் அழகிய மார்பனே! (அல்லது வானவர்.தேவர்களும் புகழ்ந்த என்னே இந்த வேடர்களின் பாக்கியம் - என்று ஆச்சரியத்துடன் புகழ்ந்த வேடர் களின் மகளாய் வளர்ந்த வள்ளியுடன் விளங்கும் அழகிய மார்பனே! (தொடர்ச்சி): எத்துணை யறங்கள் சால ஈட்டினன் வேடர் கோமான் பத்தியிற் பலநாள் தாழ்ந்தென் பாவையை யளிப்ப ஏற்ற உத்தமன் தானே அண்மி ஒளியில னாகித் தாழ்ந்து புத்திரி செங்கை பற்ற என்றனன் புலவர் கோமான்" (தொடர்ச்சி 820 ஆம் பக்கம் பார்க்க)