பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை திருப்புகழ் உரை 809 கொஞ்சிப் பேசுபவர்கள், அன்பு கொண்டவர்கள் போலப் பேசுபவர்கள், (தனகிகள்) சரசஞ் செய்பவர்கள் (அல்லது சண்டையிடுபவர்கள், (இச்சம்) இச்சை தங்கள் விருப்பத்தைப் பேசிக் கூச்சம் கொள்பவர்கள் - (அல்லது - விருப்பமான வார்த்தைகளைப் பேசிக் கூசுபவர்கள். நாணம் கொள்பவர்கள்); குசலிகள்) தந்திரம் உள்ளவர்கள் (வர்க்கம்) பிசாசு அனையவர்கள், கொள்ளைக் காரிகள், பொருளாச்ை கொண்டவர்கள்.(இத்தகைய வேசையர்மீது) எனக்கு உள்ள ஆசை சிதறுண்டு விழுந்து தொலையவும், உனது திருவருளாம் அமுதத்தைச் சேரும் - பருகும்படியான ஒரு வழியைக் காட்டும் அடையாளத்தில் என்னைச் சேர்ப்பித்து உனது திருவடியைக் கூடுதற்குத் திருவருளைத் தந்தருளுக தனதன தத்தந் தான தானன .தகுதிகு தத்தம் தித தோதக என்று பேரி (பறை) (தவில்) மேளவகை, (முரசு) போர்ப்பறை, சத்தம் ஒலி செய்யும் (தாரை)நீண்ட ஊதுங்குழல், (பூரிகை) ஊதுகுழல், (வளை) சங்கு (துடி) உடுக்கை, (பொற் கொம்பு) பொலிவுள்ள ஊது கொம்பு - இவையெலாம் (ஆர) நிறைந்து ஒலிசெய, சூரராம் அசுரர்களைப் போரில் யாவ்ரும் சிதறுண்டு அழிந்து பொடிபடச் செலுத்தின வேலனே! தினைப் புனத்தை நாள்தோறும் காவல் செய்து கொண்டிருந்தவள் பற்களின் (முறை) வரிசை முத்துப் போல உள்ள பதுமை போன்ற அழகி, மானின் வயிற்றிற் பிறந்தவள் - கிய - வள்ளி விளக்கம்பெற நாள்தோறும் அவளுடன் கூடி ளையாடின (முருகனே) இளைஞனே! முப்புரங்களை எரித்த (நக்கன்) நிர்வாணி, பாதி பாகத்தில் இடது பாதியில் மாது பார்வதிதேவி உறைகின்ற அழகிய செர்க்கன் (சொக்கநாதப் பெருமான்) ஆகிய சிவனது காதில் ஒப்பற்ற (பிரணவப்) பொருளைப் புகும்படி ஒதி அருளித் (தென்) மதுராபுரியில் வீற்றிருக்கும் பெருமாளே! (பாத மேறிட அருள் தாராய்)