பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை திருப்புகழ் உரை 805 ஆதிமூர்த்தியாய் விளங்கும் அழகிய சக்ராயுதன், (அல்லது ஆதிமூர்த்தி, திருநேமியன்), வானரூபம் (குறள் வடிவம்) எடுத்தவன், நீலமேகம் போன்ற திருமேனியை உடையவன், மாலையாகத் துளவத்தை நிரம்பக் கொண்ட அழகிய மார்பை உடையவன் ஆகிய திருமாலின் மருகனே! அழகிய யானையின் பெரிய உரித்தோலைப் போர்வையாகக் கொண்டவர், ஆலகால விஷம் நிறைந்த கண்டத்தைக் (கழுத்தைக் கொண்ட தலைவர் ஆகிய சிவபிரானுடைய (கோவிற்பொறி) கண்களினின் றும் வந்த தீப் பொறிகளினின்றும் வெளிவந்த அழகிய பிள்ளையாம் குமரேசனே! o சிறந்த முத்தமிழ்ப் புலவர்கள் விளங்கின சிறப்பைக் கொண்ட்அற்புத் மகாநகரமாம் கூடற்பதியில் (மதுரை நகரில்) வீற்றிருக்கும் பெருமாளே! (நான் அவமே தினம் உழல்வேனோ!) 968. கலைகள் எல்லாம் தன்னுள் அடங்கியுள்ள ஞான ஒளியான கடலிடையே திளைத்துக் குளித்து மூவாசை எனப்படும் கடலைத் தாண்டிக் கடந்து, பலத்ததான (சமய) வாதங்களில் மாறுபட்டுக் கிடக்காமல் - (பதி ஞான வாழ்வை) கடவுளைப் பற்றிய ஞான வாழ்வை சிவஞான வாழ்வைத் தந்தருளுவாயாக s (வள்ளி) மலையில் இருந்த ஆச்சரியத் தோற்றத்தைக் கொண்ட குறப்பெண் வள்ளியின் மனத்திலே வீற்றிருக்கும் இளங் குமரேசனே! தோடர்ச்சி) * மதுரை - முத்தமிழ் வாணர்கள் வீறிய நகர் - 'முத்தமிழ் தேர்தரு மதுரைத் தலம்" - மீனாட்சி பிள்ளைத்தமிழ் 5. "சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய வங்கண் மூதூர்" - பெரிய புரா-மூர்த்தி - 5. 'முத்தமிழோர் எண் மதுரை" திருவிளையாடற் பயகரமாலை 56. tt முகமாயமிட்ட குறமாது' பாடல் 199-பக்கம் 12.