பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை திருப்புகழ் உரை 793 விரிவாகத் தழைந்துள்ள சாத்திரங்களில் மறை பொருளாயுள்ள ரகசியங்களை ஞான நிறைந்த குருமூாத்தி. போல விளங்கிச் சிவ சன்மார்க்கங்களை முறையோடு - தக்கபடி (உனது) தந்தையாகிய சிவபிரானது ஒப்பற்ற திருச் செவியில் உபதேசித்த முருக! ஞானியே! செவ்வேளே! தன்னுடைய சாமர்த்தியத்தால், புகழ் பெற்ற ஜானகியை (சீதையை)த் துன்பத்துக்கு ஆளாக்கிய திருட்டு ராக்ஷதனாம் ராவணனுடைய உடலைத் துண்டு படுத்தி அழித்துச் (சயத்து) வெற்றி நிலையில் அயோத்தி நகருக்கு வந்தவராகிய (பூனி ராமரின்) திருமாலின் அழகிய மருமகனாய் அன்பு கூர்ந்தவளே! செழுமைவாய்ந்த வேலாயுதத்தை அசுரர்களின் உடல்கள் பிளக்கும்படிச் செலுத்தின பின்னர்த் தேவர்களை அவர்க L-Ш LI ஊராகிய பொன்னுலகுக்கு அனுப்பிவைத்து (ஈட்டிய) ஈண்டிய நெருங்கி நின்ற - அண்டி நின்ற - தேவர் தலைவனாம் இந்திரனது மகள் - தேவ சேனையைத் திருமணஞ் செய்து கொண்டவனே! சாமர்த்தியத்தாற் பல சமணர்களை எதிர் எதிராய் அமைக்கப்பட்ட கழுமரங்களில் (நீ) ஏறவைத்த அற்புத நிகழ்ச்சியை இன்பகரமாய்த், தத்தம் பிழை திருந்தின நிலையினராய், யாவரும் புகழ்ந்த மதுரை மாநகரில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே! (கதிதனைத் தருவாயே) 964. குளிர்ந்த வாசனையுள்ள மலரணிந்த கூந்தலை அலங்கரித் ஆl, முகத்தில் உள்ள, மயக்குவதான, வேல் போலும் கண்களைப் புரட்டி, புன்சிரிப்பு முத்துப்போன்ற பற்களினின்றும் தோன்ற (அல்லது முத்தம் - பிரியத்தை மகிழ்ச்சியைத் தெரிவிக்க), தேமல் படர்ந்த மார்பில் உள்ள (இள பொற்கிரி) பொன் இளகிரி அழகிய இளமை விளங்கும் மலையன்ன கொங்கையின்மீது (தொங்கல் ஆரம் பளப்பளென) தொங்கல் ஆரம்-(ஆரத் தொங்கல்)முத்துமாலை - பளபள என்று விளங்க (அல்லது 'கொங்கை பளபள என்று விளங்க அதன்மீது முத்துமா

  • மடமாதர் மார்படைத்த கோடு பளிர் பளிரென' - திருப்பு:11.