பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை) திருப்புகழ் உரை 791 963. H (பழிப்பர் வாழ்த்துவர் சில சில பெயர்தமை) சில பெயர்தமைப் பழிப்பார்கள், சில பெயர்தமை வாழ்த்துவார்கள், பொருள் கொடாவிட்டால் சில பேரைப் பழித்துப் பேசுவார்கள், பொருள் கொடுத்தால் சிலபேரை வாழ்த்திப் புகழ்வார்கள், ஒருத்தர் வாய்க்கென்று (அல்லது வாயில்) வைத்த வெற்றிலைச் சுருளைப் பிறிதொருவர் கையிற் கொடுத்து உதவுவார்கள், பணத்தின் மேலேயே நோக்கமாய் இருப்பார்கள், பிணத்தையும் (பொருள் கிட்டினால்) தழுவுவார்கள், கலந்து பேசிக்கொண்டே, பேசிக் கொண்டிருக்கும் போதே. படுக்கை வீட்டுக்குள் மருந்திடுவார்கள், அணைத்துக் கொள்வார்கள், கார்த்திகைப் (பண்டிகை) வருகின்றதே (செலவுக்கு வேண்டுமென்று) பொருளைப் பறிப்பார்கள், மாதத்துக்கு ஒரு முறையாவது நீங்கள் வந்து போகவேண்டுமென்று தம்மிடம் வந்த ஒவ்வொருவரிடமும் உறவு பாராட்டுபவர்களாய் அழைப்பார்கள், தம்மிடம் வருபவர்க்குள்ள ஆஸ்தி அத்தனையும் பறிக்க எண்ணுவார்கள் (தாம் ஆஸ்தி சேர்க்க எண்ணுவார்கள்); (பொருள் கொடாத ஒருவரை) வெருட்டி ஒட்டி விடுவார்கள் - இங்ங்னம் (அழிகுடி அரிவையர்) குடியையே அழிக்கின்ற ப்ொது மாதர்களின் (அலட்டினால்) உபத்திரவத்தால் (மற்றொரு மாட்டுடன்) இணைத்துக் (கட்டப்பட்ட எருதுபோலக் காமப் பித்து என்னும் ಗ್ಲಿಫ್ಟಿ சுழற்சி அடைவேனோ! (இவ்வாறு) பயனற்றுக் கேடுறுவதாய்ச் சில படுகுழியில் (பெருங்குழியில்) விழும் ஆபத்தினின்றும்என்னை நீக்கிக் காத்து உன்னுடைய அடியார்களுடன் என்னையும் கூட்டி அமர்த்தி - நிலையாயிருக்கச் செய்து, ஆட் கொள்ளும் வகைக்கு உன் திருமனதில் அருள் கூர்ந்து (நினைத்து) (எனக்கு) நல்ல கதியைத் தந்தருளுவாயாக (தொடர்ச்சி I O முடுக்கி ஒட்டுவர் - பொருள்தீரில் முறுக்கியே உதைகொடு வசை யுரைதரு மனத்துரோகிகள்" - திருப்புகழ் 801. * அடியார் கூட்டுறவை விரும்புதல் - பாடல் 930-பக்கம் 708-கீழ்க்குறிப்பு X