பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடும்பாளுர்) திருப்புகழ் உரை 773 கொடும்பாளூர் 955. கலை வல்லோர் எ(ண்)ணும்-மதிக்கும் (கற்பு) கல்வியிலும், கலியுக சம்பந்தமான கட்டுக்கள்ல் ஏற்படும் (கடன்) கடமைகளிலும் (அபயம்பட்டு) அடைக்கலம் புகுந்தது போலச் சிக்கி, (கட்ன பயம்பட்டு) கடமைகள் சம்பந்தம்ாய் அச்சம் அடைந்து, குற்றமுள்ளதான (பயனற்ற) (கரும) செயலாம் (சடங்கம்) சடங்குகளைக் கூறும் ஆறு சமயத்தாரும் தத்தமக்குள் (சாதப் பேச்சைப்) பங்கிட்டுக் கொண்டுக் கலகல என்னும் ஒலிக் குறிப்புடன் (கொட்புற்று)மனம் சுழன்று அலைந்து ஒருவரோ டொருவர் தாக்கும். கணக்குக்கு அடங்காத (அளவு கடந்த) பெரிய தர்க்கத்துக்கு (வாதத்துக்கு) இடந்தரும் பல கலைநூல்களிலும் (பற்றற்று) ஆசையை விட்டொழிந்து, (அரவியிட்ம்) (அந்தத் தர்க்க வாதங்கள்) ஒலிக்கும் இட்ங்களினின்றும தப்பிப் பிழைத்துக் குறியாத (க்ட்டிக் காட்ட முடியாத) அறிவு இன்னதென்பதை அறிந்து. அந்த (அறிவை) அறிந்த அந்தப் பற்றுடனே சிறிது காலம் நிலைத்திருந்து, (உனது) தருவருள வாக்கு (உபதேசம்) டைக்கப் பெறுவேனோ! (கிடைப்பது கூடுமா!) கொலைஞர்கள் என்னப்பட்ட (கொச்சை) இழிஞர்களான குறவர்களிடம் (வளர்ந்த) இளம் பச்சைக் கொடி (இளமை வாய்ந்த பச்சை நிறத்துக் கொடிபோன்ற வள்ளி அணையும் வெட்சிமாலைப் புயத்தையும் மர்ர்பையும் கொண்டவனே! கொடுமை வாய்ந்த பெரிய மா மரமாகி நெருங்கின. அசுரன் - சூரன் அழிபட்டு ஒலிக்கும் கடல் (செம்ப) (செம்முதல் உற) கலங்க, சக்கரவாள (தொடர்ச்சி) கற்பு - கல்வி - "உலகந் தாங்கிய மேம்படு கற்பு" 'தொலையாக் கற்ப" - பதிற்றுப் 59-8, 80-17, f சமயங்களின் வாதக் கூச்சல்- பாடல் 492, 945 பார்க்க # அறிவை அறிதல் - பாடல் 509-அடி 8; பாடல் 718-அடி பார்க்க X"சக்ரகிரி முதுகு நெளியப் புவியை வளையவரும் விக்ரம கலாபச் சிகாவலனும்" - வேடிச்சி காவலன் வகுப்பு