பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புக்கொளியூர்) திருப்புகழ் உரை 763 (விளக்க புகழ் கொண்ட தேவர்கள் சூழ்ந்து பணிய வாழ்கின்ற பிரபுவாம் தன்மை கொண்ட ಸೆ. i = இளைஞனாம் திருவுருவம் உடையவனே! பிரத்யகூடிமாக (என் முன் வந்து) என்னை ஆண்டருளிய வயலூரில் வீற்றிருந்தருளும் செல்வனே! இன்பம் அடையுமாறு திருவாரூரிலிருந்த பரவையாருக்கு ஏற்றதான பொன் ஆயிரத்தைச் சம்பாதிக்க பெறவேண்டித் தலங்கள் தோறும் சென்று தரிசித்த தொண்டர் (அடியராம் சுந்தரர்), தாளத்தின் இசைக்குப் பொருந்தும்படி (ராசத பாவனை) உறுதியான முயற்சித் தெளிவுடன், உள்ளப்_பெருக்கத்துடன் (நிறைந்த பத்தியுடன்), பதிகம் பாடி வருகையில், வேடையில்) கோடைக்கால வெப்பத்தால் அவருக்கு உண்டான இளைப்பு (உக்கிட) நீங்க, (வார்) நேர்மையான (அல்லது ஆர் - அருமையான) மறையவர் கோலத்துடன் (சுந்தரர் வந்து கொண்டிருந்த) காட்டிலே வந்து திதப்பட்டு - நிலையாகவே - ப்ரத்யகூடிமாப் (சுந்தரரின்) எதிரே தோன்றித் (தாம் கொண்டுவந்த) கட்டுச் சோற்றை அவிழ்த்துத் தந்தவரும், அவிநாசித் தலத்துக்கு (சுந்தரர் வரும்போது) திசை தடுமாறி அவர் மயங்கினபோது அவருக்குச் செல்லவேண்டிய திசையைக் காட்டச் சகாயனாய் வந்து உதவி செய்து மறைந்து போனவரும், (சில ஆண்டுகளுக்கு) முன்பு "எனக்குச் செம்பொனைத் தந்தருளித் திகழும் முதுகுன்றமர்ந்திர் வம்பமருங் குழலாள் பரவை யிவள் வாடுகின்றாள் எம்பெருமா னருளிர் அடியே னிட்டளங்கெடவே" - (சுந்த 7-25-2) # மறையோனாய் வந்து சுந்தரருக்குப் பொதிசோறு அளித்ததும், திசைக்குற்ற துணை செய்ததும்: சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசி என்னும் தலத்தைத் தரிசிக்கும் பொருட்டுக் காட்டு வழியிற் செல் லும்போது வெப்பத்தினால் இளைப்பும் பசியும் அவரை வருத்தின. அப்போது சிவபிரான் மறையவர் திருக் கோலத்துடன் சுந்தரரின் எதிர் தோன்றி அவருக்குப் பொதிசோறும் நீரும் தந்து அவரது இளைப்பை ஆற்றினர். [764 ஆம் பக்கத் தொடர்ச்சி)