பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவானைக்கா) திருப்புகழ் உரை 125 கும்பிடுபவர்களுடைய வினையையும் பற்று (ஆசிையையும்) அறுப்பூவன், (அல்லது வினை பற்றுதலை அறுப்பவன்), எங்கள் விநாயகமூர்த்தி, ந்க்கர் (நக்கர் - திகம்பரர் சிவன்), பெற்றருளிய குன்று அன்ன (மலை போன்ற) உருவத்தை உட்ையவன் - (ஆகிய) கற்பகவிநாயக பிள்ளைக்கு இளையவனே! அழிவு இல்லாத ஆறெழுத்தின் (பெருமைகூறும்) பாமாலை நூல்களுக்கு உரியவனே! அல்லது, ஆறெழுத்து அடக்கப்படும் அறுகோண யந்திரத்தின் மூலப்பொருளே) ஆறுதிருமுகத்தனே துஷ்டர்களை நிக்ரஹம் செய்பவனே (அழிப்பவனே)! யானைகள் சூழ்ந்துள்ள சபாமண்ட்பத்தில் முத்தமிழைப் பரிபாலித்தவனே! உயர்ச்சி பெற்ற திருவானைக்காவில் (வீற்றிருக்கும்) உத்தமனே! **சம்பு தீர்த்தத்துக்கு அடுத்துத் தெற்கே உள்ள oசுந்தரபாண்டியன் மதிலின் வெளிப்புறத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (நின்பதசேவை அநுக்கிரகிப்பதும் ஒரு நாளே!) 496. நிலவையும், கங்கையையும் சூடியுள்ள செஞ்சடைமேல் தாவி நிற்கும் ஐந்துதலை நாகத்தை ஆபரணமாக அணிந்துள்ள சிவபிரான் அருளிய குழந்தையே! அன்புடனே நாக்கொண்டு பாடல்களால் எப்போதும் (உனது) பாதத்தை ஒதி, அங்கை கொண்டு உன்னைப் பூசிக்கும் ஒழுக்கத்தை மேற் கொள்ளாமல்

  • சம்புமுனி என்றொருவன். சந்நிதிக்குப் பாவகன் மாதிரத்து பூ அலர்ந்த ஒரு தீர்த்தம் புகுந்தாடி" எமதியற்கையினைத் தலைப்பட்டான். ஆதலினால் அங்கதற்குப் பெயர் சம்பு தீர்த்தம்' என்றாயது மாதே". திரு ஆனைக்காப் புராணம் தீர்த்த விசேடம்-42, 43.

O திருவானைக்கா கோயில் பஞ்சப் பிராகாரங்கள் என்னும் ஐந்து சுற்றுவிதிகள்ை உடையதுமதில்களுள் நான்காவதுமதில் மிகப்பெரியது அ திருநீறிட்டான் மதில். சுந்தரமாறன் மதில் அதற்கு உள்ளே இருக்கும் ஒரு மதில் போலும், சுந்தரமாறன் மதுரைச் சுந்தரபாண்டிய தேவன் சம்பந்தப்பட்ட கல்வெட்டு சிதம்பரம் கிழக்குக் கோபுரத்தில் உள்ளது. இவன் காலம் 1250 கி.பி. தென் ஆற்காடு கெஜட்டீர் திருவானைக்காவில் மதில் கட்டினவன்.இவனாய்இருக்கலாம்.