பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டாலியூர்) திருப்புகழ் உரை 745 (கொத்து) திரளாக ஊர்கின்ற பூங்கொத்தினின்று வடிகின்ற, (நறவம்) தேன் என்று சொல்லும்படி ஊறும் வாயிதழ் ஊறலை உண்டு, அந்த மாதர்களோடு, கொல்லன் சேரியில் உள்ள நெருப்பு உலையில் (அடுப்பில்) விழுந்த மெழுகுபோல நான் உருகி அழியாமல். கொக்குப்போல வெண்ணிறமாக நரைகள் வருமுன்பு (கிழவனாவதற்கு முன்பு), இந்த உடலின் இளம்பருவம் இருக்கும் பொழுதே, முயற்சி செய்து, உனக்குப் பணிவிடைகளை அடியேன் செய்யும் வழியை உனது திருவருள் எனக்குக் கூட்டுவிக்காதா! (அத் துார புவன தரிசனம்) அந்தத் துார பூமியிலிருந்தே (தூரத்திலிருந்தே) தரிசனத்தை (நித்தாரம்) நிச்சயமாகத் தருவதான பொன் னெடுமதிலை (அச்சான) அடையாளமாகக் கொண்ட வயலூர்ப் பதியில் வீற்றிருக்கின்ற வேலனே! (அச்சோ) சுந்தரருக்குத் துாதாக (இறைவன் தான் அருச்சகராக வந்து போனாரோ (இ து) என்ன அதிசயம் என்று தன்சவ மழிந்த மகிழ்ச்சியில் உள்ளம் சோர்வு அடைந்திருந்த பரவைமிது (அக்காகி) கண்ணும் கருத்துமாயிருந்த (சுந்தரருடைய) விரக பரிபவம் - பரவையை விட்டுப் பிரிந்திருப்பதால் ஏற்பட்ட கவலை (அறவே) நீங்குதற்கு பார் - இந்தப் பூமியில் (திருவாரூர்ப் ப்ரதேசத்தில்) - என்பது வரலாறு; அங்ங்ணம் அச்சோ என்றும், அவசம் அடைந்தும், பரவையார் உள்ளம் சோர்ந்தார் என்பதை. 'அதிசயம் பலவுந் தோன்ற அறிவுற்றே அஞ்சிக் கெட்டேன் எதிர்மொழி எம்பி ரான்முன் என்செய மறுத்தேன் என்பார்: கண்டுயில் எய்தார் வெய்ய கையற வெய்தி யிங்கின் றண்டர்தம் பிரானார் தோழர்க் காகஅர்ச் சிப்பார் கோலங் கொண்டணைந் தவரை யானும் கொண்டிலேன் பாவி யேனென் றொன்சுடர் வாயி லேபார்த் துழையாரோ டழியும் போதில், - எனவரு மிடத்துக் காண்க. (பெரியபுரா-ஏயர்கோன் - 359) து.ாது வந்தவர் இறைவனே என்றறிந்ததும் பரவையார் சுந்தரர் தம்மிடம் வருதற்கு இணங்கினர் என்பது "அளிவரும் அன்பர்க் காக அங்கொடிங் குழல்வி ராகில் எளிவரு விரு மானால் என் செய்கேன் இசையா தென்றார்" என விளக்கப்பட்டுளது. (பெரிய புரா-ஏயர்கோன்-366)