பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

740 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கம்பர்கயி லாசர் மைந்தவடி வேல சிங்கைநகர் மேவு - பெருமாளே.(2) பட்டாலியூர் (இது பட்டாலி சிவமலை என வழங்கும். காங்கேயத்துக்குச் சமீபம் ஸ்தலபுராணம் உண்டு.) 943. திருவடி பெற தனதன தண்ணத் தான தாணன தனதன தனணத் தான தாணன தனதன தனணத் தான தானன தனதான "இருகுழை யிடறிக் காது மோதுவ பரிம்ள நளினத் தோடு சிறுவ இணையறு வினையைத் தாவி மீளுவ வதிசூர. எமபடர் படைகெட் டோட நாடுவ அமுதுடன் விடமொத் தாளை யீருவ ரதிபதி கலைதப் பாது சூழுவ # முநிவோரும், உருகிட விரகிற் பார்வை மேவுவ பொருளது திருடற் காசை கூறுவ யுகமுடி விதெனப் பூச லாடுவ வடிவேல்போல். உயிர்வதை நயனக் கர்தல் மாதர்கள் மயல்தரு கமரிற் போய்வி ழாவகை உணதடி நிழலிற் சேர வாழ்வது மொருநாளே, முருகவிழ் தொடையைச் சூடி xநாடிய மரகத கிரணப் பீலி மாமயில் முதுரவி கிரணச் சோதி போல்வய லியில்வாழ்வே.

  • முதல் நான்கு அடிகள் - கண் வர்ணனை - பாடல் 880 போல. 1 தாவி மீளுவ என்றதனால் தாவ வேண்டும் மீளவும் வேண்டும்: எனவே, வினையினும் இருமடங்கு வலியன கண்கள் என்பது பெறப்பட்டது
  1. முநிவரும் உருகுதல் - பாடல் 158, 362, 921, 1277 பார்க்க X நாடிய மாமயில் மயிலாகி முருகவேளுக்கு வாகனமாகத் (தனது முற்பிறப்பில்) விரும்பினவன் சூரன் - விசாகனருள் சிந்தை செய்த சூரன்....கலாப மயிலாகி மற்றிவனை ஏந்திட மனந்தனில் நினைந்தான்" . உபதேச காண்டம் 98. திருப்புகழ் 442-பக்கம் 610 கீழ்க்குறிப்பு.