பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கை (காங்கேயம்) திருப்புகழ் உரை 739 (கன்றிடு பிணங்கள்) வாடி அழுகின பிணங்களைத் தின்னும் (கணங்கள்) பேய்கள் (அல்லது. நாய், நரி, காக்கை, பருந்து முதலியவற்றின்) கூட்டங்கள் காணும்படிச் சண்டை செய்யும் ஒளி வேலனே! செவ்விய சொல்லை உடைய - பண் அனைய சொல், அமைந்துள்ள எங்கள் குறமங்கை - வள்ளியின் வலிய (குயம் அணைந்த) கொங்கையை அணைந்த அழகிய மார்பனே! செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் சிறப்புடன் மிளிரும் சிங்கை என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமாளே! (மயில் துன்றி வரவேணும்) 942. (சந்திதொறும்) காலையும் மாலையும் வெட்கமில்லாமல், உள்ளம் சோர்வு உற்று, வயிறே காரியமாக, அலைச்சல் உறுவேனோ! (சங்கை பெற நாளும்) நாளும் தினந் தோறும் அச்சங்கொண்டு (அங்கம்) உடலழகுள்ள மாதர்களின் வசப்பட்டுத் திரியாமல். அழகுபெற என்னுடைய வினை தொலைந்து ஒழிய, என் மனம் மகிழ்ச்சியுற (அல்லது நீ மகிழ்ந்து) அருள்புரிவர்யாக தொங்கும் சடையின்மேல் சந்திரனை அணிந்துள்ள பெருமான், மங்கையும் போர்க் கெழுந்தவளுமாகிய காளி நாணித் தலைகுனியத் தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி என்று நடனம் ஆடின பெருமான் - ஆகிய சிவனது குமாரனே! உயர்ந்த (தவம் பெற்ற) வேடர்களின் குலத்தில் வளர்ந்த மாது வள்ளியை மங்களகரமாக அணைந்தவனே! கந்தனே! முருகேசனே! (மிண்டு) நெருங்கிப் போரிட வந்த அசுரர்கள் இறக்க (அந்தம்) அழகிய (அல்லது) அந்த (கூரிய) முனை கொண்ட (அல்லது போர்) வேல் கொண்டு எறிந்து அழித்தவனே!