பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜபுரம் திருப்புகழ் உரை 733 விண்ணுலகம் போற்றவும், (அடுக்கடுக்காயுள்ளl பதினாலுலகம் போற்றவும், (அதற்கு அந்த அந்த உலகத்துக்கு இதம்) நன்மை (பரா.வ - அடுப்பவன்) பரவ பெருகும்படி அடுத்து உதவுபவனான திருமாலின் மருகனே! *_

  • கொங்கணாதி - கொங்கண ரிஷியாம் முதல்வரால் (பொன்) தரப்பட்ட (கொங்கினுாடு) கொங்கு நாட்டில் சுகமாயிருக்கின்ற (கொங்கின் வீர) பூந்தாதுக்கள் (உள்ள மாலை) அணிந்த வீரனே! பதினெண் கணங்களும் ப்ரியப்படுபவனே! குமரனே! அழகிய

(கொங்கு நறுமணம் வீசும் குறக்கொடி (வள்ளியின்) கொங்கைகள்ையே அணைந்து நெருங்கும் பெருமாளே! i கொங்கு மண்டலத்தில் உள்ள ராசிபுரம் என வழங்கும்) ராஜபுரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே! (பஞ்ச பாதகரைப் புகழ் செயலாமோ) (தொடர்ச்சி): "வேழம் துயர்கெட விண்ணோர் பெருமானாய் ஆழிபணி கொண்டானால் இன் று முற்றும் அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்" m பெரியாழ்வார் 2-10-8.

  • கொங்கணாதி தரப் பெறு கொங்கு - கொங்கு நாட்டில் இருந்த கொங்கணச் சித்தர் தாமிர முதலிய லோகங்களைப் பொன் செய்து விரும்பினோர்க்குக் கொடுத்தனர். ஆதலால் அவருக்கும் கொங்கு நாட்டுக்கும் சம்பந்தம் உண்டு எனத் தெரிகின்றது.

தோற்றிய செம்பு தரா ஈயம் பித்தளை சூழ் பச்சிலைச் சாற்றுட னாக ரசங்கந் தகமிட்டுத் தந்திரமாய்த் தேற்றுந் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன் செம் பொன் செய்து மாற்றுரை கண்டது பொன்னுாதி யூர் கொங்கு மண்டலமே. (கொங்கு மண்டல சதகம் 37) 'கொங்கணவர் நாடு கொங்கு நாடா யிருக்கலாம். - அபிதான சிந்தாமணி 'கொங்கணாதி தரப் பெறு' என்பதும் பாடமாயிருக்கலாம்: 'கோதைகம முங்கவிகைக் கொங்கனென விள்ளுங் கோதைநனி யாண்டதொரு கொங்குவள நாடு’ - பேரூர்ப் புராணம் - நாட்டுப் 2. (கோதை - சேரன்) 1 கொங்கு மண்டலத்து 24 நாடுகளுள் ஒன்று - ராசிபுர நாடு.