பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 2. திருவானைக்கா, (இது பஞ்சபூத ஸ்தலங்களில் அப்பு ஸ்தலம். மூவர் தேவாரமும் பெற்றது. திரிசிராப்பள்ளிக்கு வடக்கு 21/2 மைல் வெள்ளையானை வழிபட்ட ஸ்தலமாதலால் ஆணைக்கா என்றும், ஜம்பு நாவல் (வெள்ளை நாவல்) மரத்தடியிற் சிவபிரான் எழுந்தருளியிருப்பதால்: "ஜம்புகேச்வரம். என்றும் பெயர் வந்தன. கச்சியப்ப முநிவர் பாடிய ஸ்தல புராணம் ஒன்றுள்ளது) 495. வேசையர் மயக்கறப் பாதசேவை தந்தன தானன தத்த தத்தன தந்தன தானன தத்த தத்தன தந்தன தானன தத்த தத்தன தனதான அஞ்சன வேல்விழி யிட்டழைக்கவு மிங்கித மாகந கைத்துருக்கவு மம்புயல் நேர்குழ லைக்குலைக்கவும் நகரேகை. அங்கையின் மூலம்வெ ளிப்படுத்தவு மந்தர மாமுலை சற்றசைக்கவு மம்பரம் வீணில விழ்த்துடுக்கவு மிளைஞோர்கள்: நெஞ்சினி லாசைநெ ருப்பெழுப்பவும் வம்புரை கூறிவ ளைத்திணக்கவு மன்றிடை யாடிய ருட்கொடுக்கவு மெவரேனும் நிந்தைசெ யாது.பொ. ருட்பறிக்கவு மிங்குவ லார்கள்கை யிற்பிணிப்பற நின்பத சேவைய துக்ரகிப்பது மொருநாளே: "குஞ்சர மாமுக விக்கிநப்ரபு tஅங்குச பாசக ரப்ரசித்தனொர் கொம்பன்ம கோதரன் முக்கள்ை விக்ரம கணராஜன். விநாயகப் பெருமானுக்கு உரிய அருமையான தோத்திரம் இது. f விநாயகர் திருக்கரத்தில் அங்குசம், பாசம் இரண்டும் உண்டு: (அடியார்களின்) ஆணவம் என்னும் யானையைப் பிணிக்க (கட்ட)ப் பாசம் ஒரு திருக்கரத்திலும், அதை அடக்க அங்குசம் ஒரு திருக்கரத்திலும் கொண்டுள்ளார். (தொடர்ச்சி - பக்கம் 123-பார்க்க)