பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71.4 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தண்டிகை களிறு பரிமேற்றணி வெண்குடை நிழலி லுலவாக்கன சம்ப்ரம விபவ சவுபாக்கிய முடையோராய்க் குஞ்சமும் விசிற இறுமாப்பொடு பஞ்சணை மிசையி லிசையாத்திரள் கொம்புகள் குழல்கள் வெகுவாத்திய மியல்கீதங். கொங்கணி மகளிர் பெருநாட்டிய நன்றென மனது மகிழ்பார்த்திபர் கொண்டய னெழுதும் யம"கோட்டியை யுனராரே t பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட சகுனி கவறாற்பொருள் பங்குடை யவ்னி பதிதோற்றிட அயலேபோப்ப். பண்டையில் விதியை நினையாப்பணி ரனன்டுடை வருஷ முறையாப்பல பண்புடன் மறைவின் முறையாற்றிரு வருளாலே, வஞ்சனை நழுவி நிரைமீட்சியில் முந்துத முடைய மனைவாழ்க்கையின் வந்தபி னுரிமை யதுகேட்டிட இசையாநாள். மண்கொள விசையன் விடுதேர்ப்பரி யுந்தினன் மருக வயலூர்க்குக வஞ்சியி லமரர் சிறைமீட்டருள் பெருமாளே.(6)

  • யமலோகத்திற் படவேண்டிய துன்பங்கள், கோட்டி - துன்பம் - f பின் நான்கு அடிகள் பாரத கதைச் சுருக்கமாம். துரியோதனாதிகள் சகுதினியின் உதவி கொண்டு சூதாட்டத்திற் பஞ்ச பாண்டவர்களை வென்றதும் (நாடிழந்த பாண்டவர்கள் சூதாட்டத்திற் செய்த சபதம் தவறாதபடி பன்னிரண்டு வருஷம் காட்டிற் காலங் கழித்துப் பதின்மூன்றாம் வருஷம் அஞ்ஞாதவாசம் செய்ததும், அஞ்ஞாதவாசம் முடிந்தபின் விராடன்நாட்டில் துரியோதனன் படைகளால் கவரப்பட்ட நிரையை அருச்சுனன் மீட்டதும், பின்பு பாண்டவர்கள் தங்கள் பாகத்தைத் துரியோதனனிடம் கேட்க, அவன் இணங்காததால் இருதிறத்தார்க்கும் போர் நிகழ, அப்போது அருச்சுனனுடைய தேரிற் சாரதியாக அமர்ந்து கண்ணபிரான் தேரைச் செலுத்தினதுமான வரலாறு இங்கு கூறப்பட்டுளது.