பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவூர் திருப்புகழ் உரை 703 கருவூர் 927. என் புத்திகொண்டு நான் ஒரு பேரறிவாளனாகி, என் மனம் நன்னெறியையே பற்ற அதனால் நான் ஒரு உத்தம புருஷனாகி - சிரேஷ்டனாகி (சிவஞான பதிவாகி) சிவ ஞானத்தில் என் மனம் ஊன்றுவதாகி, மேலான யோக வழியை (நான் பற்றும்படி) அருள் புரிவாயாக (என் செல்வமே அழிவிலாப் பொருளே! என் தியானப் பொருளே! சிறந்த பேரின்பப் பொருளானவனே! (அல்லது - நன்மை தருங் கடவுளே!). என் புகலிடமே! (சொல்) எல்லாரா லும் புகழப்படும் மேலான செவ்வேளே! கருவூர்த் தலத்துப் பெருமாளே! (பரயோகத் தருள்வாயே) . 928. இளநீர் போன்றதும், ᏞᏝ☾Ꭰ☾Ꮜ? போன்றதுமான கொங்கையாகிய அமுதம் பெருகும் இடத்தை, கனிரசம் அடங்கியுள்ள குடத்தை (எண்ணும்) மதிக்கும் (மரபோடே.) வழக்க முறையில் (அல்லது கொக்கோக சாத்திர முறைப்படி (இருகைக்கு அடைத்து) இரண்டு கைகளிலும் அடையச் செய்து, இடை நெகிழவும், கூந்தல் சரியவும், வாயிதழினின்றும் சர்க்கரை போலவும், பழம் போலவும், ஊறும் ஊறலை. தாமரை மலர் போன்ற முகத்தோடு_முகத்தை வைத்துப் (அருத்தி) பருகி உண்டு, (நலம் - முதிர - து) - நலம் - இன்பம், (முதிர)-முற்றுவதால் உண்டாகும், (து) அனுபவத்துடன் இழிந்த அல்குலிடத்தே முழுகி. தொடர்ச்சி:- "நிதியினை பவளத் துணை நெறியினால் நினையவல்லார் கதியினை" - திருமங்கையாழ்வார் குறுந்தாண்டகம் 1. f கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" - கந்தரது 51. முளரிப்பு - முளரிப் பூ