பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலுர்) திருப்புகழ் உரை 685 சேர்கின்ற இந்தச் சுகம் அற்ப சுகமென உணர்ந்து, இகத்தின் நன்மையையும் பரத்தின் நன்மையையும் உணர்ந்து அறியக்கூடிய அறிவு இல்லாத நான், மயக்கத்தைத் தரும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களும் நீங்கப்பெற்று, எண்ணம் (பலவிதமாகச் சிதறாமல்) ஒரு வழிப்பட்டு, ம்புலன்களின் வாயிலில் அகப்பட்டுக் கல்ங்குகின்ற அறிவை (உனது) திருவடியில் நிலைநிறுத்திச் சற்று உண்மை உணர்ச்சி அறிவில் ஏற்பட, குற்றமெல்லாம் ஒழிய, ஒப்பற்ற இவ் வுலக வித்தைகளையும், முக் குணங்களையும் (நிர்த்தத்து வைத்து) நான் ஆட்டுவித்தபடியே ஆடவைத்து (என் வசமாக்கி, வேதங்கள் சொல்லுகின்ற அனுபோக உருவினை, அளவு கடந்த முழுப் பெரு வெளியையும் ஒளியையும் அறியக்கூடிய சிவானுபவ உண்மைக் கீர்த்திப் பொருளை, முத்தி என்னும் சிவ சமுத்திரத்தை நான் என்று கூடுவேன்! திகுட திகுகு, தி.குகுட திகுகு- தகுட தஆகு- தகுகுதகுகுட்..... திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்தி என்று பேரி (முரசு) வாத்தியம் (திமிலை) பறைவகை, (கரடிகை) கரடி கத்துவது போன் ஒசையையுடைய பறைவகை, (பதலை) மத்தளவகை, (சல்லரி) சல் என்னும் ஒசையுடைய பறை (அல்லது) கைத்தாளம்), (தவில்) மேளவ்கை, (தமரம்) ஒலி செய்யும் (முரசுகள்) ப்றைவகைகள், குடமுழ) முழவு விாத்தியவகை இவைகளுடன் (துடி) உடுக்கை யென்னும் ப்றைவ்கை, சப்தம் செய்கின்ற (கண்ப்பறைகள்) தோல் கருவிப் ப்றைகள் நிரம்ப ஒலிசெய்து அதிர்ச்சியுறச் செய்ய, அசுரர் கூட்டத்துக்குப் பகைவன், தேவர்களின் ஜயவீரத் தலைவன் (வெற்றிச் சேனாபதி), நன்மையையே த்ரும் பசுப்தி - சிவபிராற்குக் குரு - என்று வெற்றிச் சின்னங்கள் ர கூட்டமாய்ப் பலவும் நிரம்பி ஒலிசெய்ய, அவ் வ்ொலியின் எழுச்சியால், (சிகரம்) மலைகளின் (கொடுமுடி) உச்சிகள் எல்லாம் கிடு கிடு கிடு என்று அதிர, மகர ன்கள் வாழும் (சலநிதி) கடலானது மொகு, மொகு மொகு என்று கலக்கமுற, எட்டுத் திசைகளி லும் உள்ள் யானைகள் (மட்டற்று அறப் பிளிற) அளவு கடந்து மிகவும் (பிளிற) கூச்சலிட், (உலகைத் தாங்கி நிற்கும்) ஆதிசேடனுடைய