பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர்) திருப்புகழ் உரை 677 919. அணிந்துள்ள (மேகலை) இடையணியை தளர்த்திக் காட்டி நீண்ட கூந்தலை விரித்துக் காட்டி, வேல் போன்ற கண்களைப் புரட்டிக் காட்டி, அழகு பொலியும்படி (மேனியை) உடலை மினுக்கிக் காட்டி, கூத்துக்களை நடித்துக் காட்டித் தமது வீடுகளுக்கு அழைத்துக் காட்டி, மனமத ராஜனுடைய சாத்திர நூலை (கொக்கோக சாத்திரத்தை) விளக்கி எடுத்துரைத்துக் காட்டி, ரவிக்கை அணிந்த கொங்கையைக் காட்டி, எல்லாருடனும் சிரித்துக் காட்டி, உபாய வகையிலே (தந்திர வகையாலே). அன்பு வைத்துள்ளது போன்ற தமது மனத்தைக் காட்டி - (இங்ங்னம் எல்லாம்) வேசையர்கள் காம மயக்கம் ஊட்ட நான் எனது ஆசையை அவர்களிடம் காட்டி அழிந்துபோகக் கடவனோ! ஆசை மிக்க விருப்பத்தைக் காட்டி (விருப்பத்துடனே) ஞான சாத்திரங்களை விரித்து எடுத்து உரைத்துக் காட்டி. ஆ வல்ல ஆகத்திய முநிவருக்கு அந்த ஞானத்தைக் (கூட்டுவித்த)உபதேசித்த குருநாதனே (அல்லது ஞானமும் காட்டி, பழந்தமிழை (அதன் இலக்கணம் முதலியவற்ன்ற) அவருக்குத் தெளிவித்த குருநாதனே): மூன்று உலகங்களையும் காத்துக் காட்டி, சேவற் கொடியை உயர்த்திக் காட்டும் வயலூரனே! ( ) வலிமை கொண்ட (கரும்பு) வில்லை மன்மதனுக்கு பட்ையாகத் தந்து உதவின வயலூர்ப் பெருமானே! (அல்லது - மூரிவில் வலிமை கொண்ட (கரும்பு) வில்லை ஏந்தின மன்மத்னுக்கு (காட்டு) குறிப் பொருள்ாக இருந்த வயலூர் முருகனே! மன்ம்தனுடைய ல்லின் வலிமை எவ்வளவினது என்று உலகோர் தெரிவதற்கு - முருகவேள் வள்ளிபால் கொண்ட மையலே ஒரு எடுத்துக் காட்டாக இருந்தது என்றபடி) (தொடர்ச்சி):- "கன்று காமநோய்க் கவலை யுள்வைத்தான்; "மையல் மானுட வடிவந் தாங்கினான்; == "கலைப்படு மதியப் புத்தேள் கலங்கலம் புனலில் தோன்றி அலைப்படு தன்மைத் தன்றோ அறுமுகன் ஆடல் எல்லாம்" (தொடர்ச்சி 678 ஆம் பக்கம் பார்க்க)