பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர்| திருப்புகழ் உரை 667 சோலைகள் (நீங்காத) நிறைந்த திருச் செங்கோடு ப்ரதேசத்திலும், கருங்குவளை மலரும் (நீர் நிலைகள்) சூழ்ந்துள்ள வயலூரிலும் பிரியங் கொண்டுள்ளவனே! கொன்று மோதி எதிர்த்துப் போர் புரியும் சூர தீரர்கள் எல்லாம் பிரமிக்கும்படியான பெருமாளே! காலனுடைய கூத்தைக் (கொல்லுந் தொழிலை) அவனுக்கு இல்லாமற் செய்த காலனுக்கு வேலை யில்லாதபடித் தானே (அசுரர்களின்) உயிரை மாய்த்த பெருமாளே! (ஆடல் தாள்கள் எனக்கின் றருள்வாயே) 915. தாமரையின் நிரம்ப நறுமணமுள்ள மலருக்கு ஒப்பான (உனது) திருவடி யிரண்டின் நினைப்பே இல்லாத அடியேனை "மகரந்தப்பொடி விரியும் கொன்றை, சுரபுன்னை, மகிழமரம் இவைகள் கற்பக விருகூடிங்கள் என்னும்படியாக நிறைந்துள்ள விராலி என்கின்ற பெருமை வாய்ந்த (அல்லது அழகிய) மலையில் யாம் வீற்றிருக்கின்றோம்; நீ (அத்தலத்தை) நினைப்பில் வைத்து வருவாயாக" எனக் கூறி அழைத்து என்னுடைய மனத்தில் உள்ள ஆசைகள், குற்றங்கள் இவைகளை (அல்லது - ஆசை என்கின்ற குற்றத்தை) ஒழித்து ஞான அமுதப் பிரசாதத்தைத் தந்த (உனது) அன்பை இனி எந்நாளும் மறக்கமாட்டேன்; மன்மதனை எரித்த நெருப்புக் கண்ணையுடைய நெற்றியையும், (காதிய) எவற்றையும் அழிக்க வல்லதாய்ப் பாய்ந்து வந்த ஆகாய கங்கையைச் சூடியுள்ள சடையையும், காட்டில் இருக்கும் புற்றில் படமெடுத் தாடுகின்ற பாம்பை அணிந்துள்ள காதையும் கொண்ட அப்பர். சிவபிரானுக்குக் குருநாதனே! சந்திரனொடு சூரியனும் நகூடித்திரங்களும் உலவுகின்ற (அளவுக்கு) உயர்ந்த சோலை, பக்கங்களிற் சுற்றியுள்ள (சுற்றுப் பக்கங்களில் உள்ள), வயலுாரனே!