பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர்| திருப்புகழ் உரை Ꮾ55 910. தாமரையில் விளங்கும் அரிவை - மாது லகூழ்மிக்கு -- ஒப்பான அழகிய அலங்காரம் உள்ள மாதர்கள்மீது மருட்சியை (மோகமயக்கத்தைத் தருகின்றதும், கலக்கம் தருவதுமான காமசாத்திரத்தை (கொக்கோக சாத்திரத்தை) முற்றும் உணர்ந்துள்ள இளைஞர்களின் புணர்ச்சி யின்பத்துக்கு ஆசை மிக்கெழ நிரம்பிய நறுமணமுள்ள பச்சைக்கற்பூரம், (துாமம்) அகிற்புகை போன்ற நறும்புகை இவைதமைக் கொண்டுள்ள கனத்த கொங்கைகள் எழுப்பும் மனக்கலக்கத்தாலும், ஆகாயத்தில் அசைகின்ற மின்னல் போன்ற இடையாலும், களங்கம் இல்லாத ஒளிமயமான (பனிக்கிரணம் கொண்ட) சந்திரபிம்பம் ஒத்த முகத்தாலும், (பாட்டு) ஒசை முதலிய கலந்து எழச் செய்யும் வன்டுகள் சூழ்ந்து சுழலும் இருள் நிறமான (கரிய) கூந்தலாலும், யை எப்போதும் வீசுகின்ற ரத்னவளைகளை அணிந்துள்ள அழகிய கைகளா லும், மாவடுவின் கீற்றனைய கண்களின் பார்வையாலும், இனி வருத்தம் உறுவேனோ! போரில் பூதம், யாளி, குதிரை இவைகள் கட்டப்பட்டுள்ள பொன்மயமான தேர்களும், யானைகளும், அசுரர்களும் பொடிபட்டழியக் கூர்மை கொண்ட வேலாயுதத்தைச் செலுத்தின பராக்ரம உருவத்தனே! கூட்டமான பேய்கள் "வாழி" என்று எதிர் நின்று புகழக் காட்டில் (சிவனுடன்) நடனம் செய்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை உடைய (தனிவீரம்) நிகரிலாத வீரம் வாய்ந்த அம்மை - பார்வதி மனம் மகிழ்கின்ற வீரனே! தேவர்களுக்குத் தலைவனும் இந்திராணியின் கணவனுமான இந்திரனுடைய மகள் தேவசேனையின் உடலைத் தழுவும் நாதனே! குறமகள் வள்ளி உன்னை ஆணைவதற்கு வேண்டிய சூழ்ச்சிகளைச் செய்த நீதிமானே! திருக்கையிற் கொண்ட வேலாயுதனே!