பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலூர்) திருப்புகழ் உரை 643 இடப்பட (குறிகள்) அடையாளங்கள் (வரையை உற) - ரேகைகள் போலத் தெரிய, நெற்றியாகிய இடத்திலே (முகத்தோடு முகம் அணைவதாய்)த் தாக்கிக் கலக்கம் கொள்ளும்படி, இடை நெகிழவும், ஆடை கழன்று போகவும். (இட்டத்து) ஆசையுடனே (அரைப் பை யது) (அரையில் உள்ள பாம்புப் படம் போன்ற) அல்குலைத் தொட்டு - பரிசித்து - திரித்து மிக (அதை) மிகவும் அலைத்து (இரணம் இடும்) போர் புரியும் (முரணர்) பகைவர்களின் கண் போல (இயற்கையாகக் கறுத்திருக்கும் விழியானது) மிகச் சிவந்த றத்தை அடையவும், வளை அழகிய கையில் நெகிழவும். (அகரு) அகிலும் அதனுடன் சேரும் கஸ்தூரியும் ஒன்று சேர்ந்து நறுமணம் வீச, (கனத்த) மேகம் போன்ற அல்லது பாரமான - அடர்த்தியுள்ள பலவிதமான (கொத்து) பூங்கொத்துக்களைக் கொண்ட கூந்தல் கலைந்து விழ, மயில், புறா, குயில், வண்டு, குக்கில்) செம்போத்து, ஆகிய புட்களின் குரலைக் காட்டி, உளம் நெகிழ்ந்து உணர்ச்சி அழியப் படுக்கையில் நிரம்ப (அமளிபட) (ஆரவாரம்) எழ வக்கிட்டு வதக்கப்படுவது போலச் சூடேற - மெய் (உடல் சம்பந்தப்பட்டு செய்யப்படும்) (கரணம்) கலவி - (வர்க்கத்தினில்) வகைகளில், புணர்ச்சி செய்து சுகம் அனுபவிக்கும் அச் சமயத்தில். (அலையின்) கடல்போற் பெரிய கண்ணின் மணியாம் வலையை வீசி, (எனது) பொருளைக் கொள்ளை கொள்ளப் பாசம் (விளைக்கும்) பொறிச்சியர்கள்) தந்திரக்காரர்களின் (மதனகலை) மன்மதனது சாத்திரமாம் கொக்கோக சாத்திர அறிவால் வரும் (அல்லது காமலீலைக் குரிய == புணர்ச்சிக்கு உரிய கரணங்களால் ஏற்படும்) (விதனம்) துக்கத்தை (அறுவித்து) அழித்துத் தொலைத்து, உனது திருப்புகழில் நாட்டம் வைத்துத் துதிக்கும்படி, எல்லை கடந்த சிவஞானம் சிக்குற்று உணர்ச்சியினில் (உணர்ச்சியினில்) என் அறிவிலே பெறப் படும்படியாக (நீ என்னை)க் காப்பாற்றிக் காத்தளித்து - என் சோர்வை நீக்கி அருள்வது எந்த நாளிலோ! (எந்நாள் எனைப் புரப்பாய் - என்றபடி) திகுட திகு தகுடதகு.தக்குத்த குத்தகுர்த திங்குதிதோ