பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலுர்) திருப்புகழ் உரை 641 (ஏதம்) கேடு விளைக்கும் (மயல்) காம மயக்கத்தைக் (காட்டும்) ஊட்டும் மாதர்கள் தமது காம வலையை ವ್ಲಿ (எனது) வலிமை யெல்லாம் தொலைந்து போகும்படி செய்வித்தல் அடங்காதா! இல்லையாகாதா! (வீர அபர ஆட்டு) வீரத்துடன் எதிர்க்கும் வல்லமை கொண்ட சூரர்களின் சேனை என்னும் காட்டில் நெருப்பு விழும்படிப்புகுவித்து மயில் வாகனத்தை ஊர்ந்தவனே! வேலாயுதத்தை அதன் உறையினின்றும் எடுத்து நீட்டி கடலிலே செலுத்தின (வேலை) செய்கையாம் விளையாட்டை மேற்கொண்ட வயலூர்ப் பெருமானே! மலைநாட்டில் சேர - வள்ளிமலைப் ப்ரதேசத்தில்(சேர) சேர்ந்து (வாரமுடன்) அன்புடனே நீ விரும்பின (சீலம்) நல்ல்ொழுக்கத்தைப் பூண்டிருந்த குறத்தி - வள்ளியின் மணவாளனே! (அல்லது (உன்னைச்) சேர (சேருதற்கு) வள்ளிமலைப் ப்ரதேசத்தில் அன்புடனே வி.ே நல்லொழுக்கத்தளாகிய குறத்தியின் மண்வாளனே!) (உனது) ஒளி வாய்ந்த புகழை விளக்கமுறச் சொல்லி சை மிகும் (கோட்டி) கூட்டத்தாராகிய தேவர்களின் ைேய நீக்கின. பெருமாளே! (ஈடழிதல்...அமையாதோ). 906. == (இகல்) வலிமை, (கடினம்) கடுமை, முகபடம் முகத்துக்கு இடும் அலங்காரத் துணி, (விசித்ரம்) பேரழகு, துதிக்கை, மதஜலம், மதம் இவைகளைக் கொண்ட யானையை எதிர்க்கும் திறத்ததாய்ப் புளகங்கொண்ட கொங்கை நெகிழ்ச்சியுற గ్ధது) ஆசையுடன் (எட்டி) தாவிக் கழுத்தைக் கைகொண்டு கட்டி அணைத்து அழுத்தி, வாயிதழாம் (பொதியின்) நிற்ைவினின்றும் (கிடைக்கும்) அ த-வாயூறலை (காம) சாத்திரப்படி நிரம்ப உண்டு உரு முத்தமிட்டு நகத்தைக் கொண்டும், பற்களைக் கொண்டும் தொடர்ச்சி: இனிக் கடலில் வேலைவிட்டது கடல்நடுவே மாமரமாய் நின்ற சூரன்மீது முருகவேள் வேலை ஏவினதையும் குறிக்கும்: "மண்ணித்தோகை மேற்றோன்றி மாக்கடற்சூர் வென்றோன் அணிச்சே வடியெம் அரண்" - (இரும்பல் காஞ்சி). "கடல்மாக் கொன்ற திப்படர் நெடுவேல்" - கல்லாடம் 41. x நகக்குறி (தந்தம்) பற்குறி நகத்தால் இட்ட குறி. பல்லால் இட்ட குறி.